கள்ளப்புலியூர் ககோலேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
கள்ளப்புலியூர் ககோலேஸ்வரர் சிவன்கோயில்,
கள்ளப்புலியூர், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612105.
இறைவன்:
ககோலேஸ்வரர்
அறிமுகம்:
தர்மத்தை அழித்து அதர்மம் புரிபவன் இருபத்தொரு நரகங்களை வரிசையாக அடைவான். இருபத்தொரு நரகங்களில் இருந்து நம்மை மீட்டெடுக்கும் ஈஸ்வர மூர்த்திகள் உள்ளனர். அவற்றில் ஒன்றான ககோலத்தில் இருந்து நம்மை மீட்டெடுக்கும் ஈஸ்வரர் தான் ககோலேஸ்வரர் எனப்படுகிறது. இவர் இருக்குமிடம் ககோலேஸ்வரம்.
கும்பகோணம் – சென்னை நெடுஞ்சாலையில் 5 கிமி தூரம் சென்றால் கள்ளபுலியூர் உள்ளது. அரசு எஞ்சினீரிங் மற்றும் மாஸ் காலேஜ் எனும் இரண்டு கல்லூரிகளின் இடையில் சிறிய சாலை திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில் செல்கிறது, அதில் சரியாக 500மீட்டர் சென்றவுடன் உயர்மின் கோபுரம் வலதுபுறம் நிற்கும் அதன் எதிரில் உள்ள நெல்வயலின் வரப்பில் 250மீட்டர் தூரம் நடக்கவேண்டும். வயலின் நடுவில் எந்தவித இணைப்பு சாலையும் இன்றி இக்கோயில் தற்போது உள்ளது. முற்றிலும் சிதைவடைந்த நிலையில் இருந்த இக்கோயிலை அரன்பணி அறக்கட்டளை குழுவினர் முற்றிலும் புதிய கோயிலாகவே எழுப்பி உள்ளனர்.
இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக ககோலேஸ்வரர் எனும் பெயரில் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இறைவனுக்கு கஜபிருஷ்ட விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இறைவி தெற்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார் இரு சன்னதிகளையும் ஒரு மண்டபம் இணைக்கிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கள்ளப்புலியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி