Tuesday Dec 24, 2024

களப்பால் அழகியநாத சுவாமி திருக்கோயில், திருவாரூர்

முகவரி

களப்பால் அழகியநாத சுவாமி திருக்கோயில், களப்பால், நடுவக்களப்பால் அஞ்சல், திருத்துறைப்பூண்டி (வழி), மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614710.

இறைவன்

இறைவன்: அழகியநாத சுவாமி / ஆதித்தேச்சுரர் இறைவி: பிரபா நாயகி

அறிமுகம்

களப்பால் அழகியநாத சுவாமி கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள களப்பால் என்னுமிடத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்று என்னும் பெருமையையுடையது. திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் 3 கிமீ அடுத்து மடப்புரம் உள்ளது. மடப்புரத்தின் இடப்புறம் வழியாக சென்றால் களப்பாலை அடையலாம். களப்பாளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்த ஊராதலின் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும். இது மருவி களந்தை என்றாயிற்று. இக்கோயில் விஜயாலய சோழனின் மகன் ஆதித்தசோழன் (கி.பி. 850 – 890) கட்டுவித்தது. எனவே ஆதித்தேச்சரம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள இறைவன் அழகியநாத சுவாமி என்றும் ஆதித்தேச்சுரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பிரபா நாயகி ஆவார். களப்பால் கூற்றுவ நாயனார் அவதரித்த தலமாகும். இஃது சுந்தரர் வாக்கில் இடம்பெற்ற சோழ நாட்டு வைப்புத் தலமுமாகும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

களப்பால்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருத்துறைப்பூண்டி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top