Wednesday Dec 18, 2024

கல்பட்டு சனீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில், கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம் – – 605 302 போன்: +91- 4146 – 264 366, 97868 65634 , 94451 14881

இறைவன்

இறைவன்: சனீஸ்வரர்

அறிமுகம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோயில். இங்கு 21 அடியில் சிலை கொண்டு கனிவான பார்வையோடு கம்பீரமாக காட்சி தருகிறார் சனி பகவான். இங்குள்ள சனிபகவானை குடும்பத்தோடு சென்று தரிசித்து அவர் முன்பு சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்து, நமது குறைகளை தீர்த்து சிறப்பான வாழ்வளிக்க வேண்டும் என்று மனதார வேண்டினால் நன்மை பிறக்கும். இத்திருத்தலத்தில் சனி பகவானோடு சேர்த்து, கணபதி, சிவன் பார்வதி, ஆஞ்சநேயர், தண்டாயுதபாணி என பல கடவுளின் பிரமாண்ட சிலைகள் உள்ளன. இங்குள்ள பஞ்சமுக ஈஸ்வரரின் சிலை 11 அடி உயரம் கொண்டது. அதேபோல இங்கு 18 அடியில் பிரமாண்டமான துர்க்கை சிலையும் உள்ளது. இங்குள்ள கணபதியின் சிலை தேசிங்குராஜா காலத்தில் அவரால் வழிபடப்பட்ட சிலை என்று கூறப்படுகிறது. இங்குள்ள சனிபகவானையும் துர்கை அம்மனையும் வழிபட்டு, கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, சூரிய காயத்ரி மந்திரம் அதை 108 முறை ஜபித்தவாறு சனிபகவானுக்கு தாமரை மலரை சமர்ப்பித்தால் ஏழரை சனி உள்ளிட்ட அனைத்து விதமான சனி தோஷங்களில் இருந்தும் விடுபட்டு சிறப்பான வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை.

புராண முக்கியத்துவம்

சனீஸ்வரருக்கு ஒரு கால் ஊனம் என்பது அறிந்த விஷயம். தனக்கு கிடைக்காத சாகாவரம் தனக்கு பிறக்கப்போகும் மகன் இந்திரஜித்திற்காவது கிடைக்க வேண்டும் என ராவணன் விரும்புகிறான். இதற்காக கடும் தவம் செய்கிறான். தேவர்கள் கவலை கொள்கின்றனர். கிரகங்களெல்லாம் ராவணனுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றன. இந்நிலையில், சனியின் பார்வை குழந்தையின் மீது பட வழியே இல்லாமல் போகிறது. நாரதர் சனீஸ்வரனிடம், “எப்பாடு பட்டேனும் குழந்தையை ஒருமுறை பார்த்து விடு,” என்கிறார். அதன்படி, குழந்தை பிறக்கவும் சனீஸ்வரன் பார்த்து விடுகிறார். பாடுபட்டு செய்த தவம் வீணா கி விட்டதே என்ற ஆத்திரத்தில் சனியின் காலில் அடித்து ஒடித்தான் ராவணன். இதன்பிறகு சனி நொண்டிக் கொண்டே நடக்க வேண்டியதாயிற்று. அவரது கால் கட்டையானது என்றும் சொல்வர். இதன்படி சனீஸ்வரரின் ஒரு கால் காக வாகனத்தில் இருப்பது போல சிலை வடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கைகள்

இங்குள்ள சனிபகவானையும் துர்கை அம்மனையும் வழிபட்டு, கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, சூரிய காயத்ரி மந்திரம் அதை 108 முறை ஜபித்தவாறு சனிபகவானுக்கு தாமரை மலரை சமர்ப்பித்தால் ஏழரை சனி உள்ளிட்ட அனைத்து விதமான சனி தோஷங்களில் இருந்தும் விடுபட்டு சிறப்பான வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

பிரார்த்தனை ஸ்தலம்: பிரும்மானந்த சுவாமியால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் ஒரு பிரார்த்தனை ஸ்தலமாகும். சனீஸ்வரன் சன்னதி முன்பு அமர்ந்து அமைதியாக பிரார்த்தனை செய்து வர வேண்டும். நுழைவிடத்தில் உள்ள பிரணவ கணபதி சிலை இங்குள்ள ஒரு குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும். தேசிங்குராஜா வணங்கிய கணபதியாக இது கருதப்படுகிறது. கோயிலுக்குள் இருக்கும் விநாயகர் வலம்புரி விநாயகர் ஆவார். இங்கு உச்சிஷ்ட கணபதி, 11 அடி உயர பஞ்சமுக ஈஸ்வரர் (புவனேஸ்வரர்), புவனேஸ்வரி, கோபாலகிருஷ்ணன், 11 அடி உயர பஞ்சமுக ஈஸ்வரர், பஞ்சமுக ஆஞ்சநேயர், 8 அடி உயர தண்டாயுதபாணி, 18 அடி உயர அஷ்டாதசபுஜ துர்க்கை ஆகியோருக்கும் தனித்தனி விமானங்களுடன் சன்னதிகள் பிரம்மாண்டாமாக அமைக்கப்பட்டுவருகிறது. சிலைகள் அனைத்தும் பிரம்மாண்டமாக கலை நுட்பத்துடன் விளங்குகிறது.

திருவிழாக்கள்

சனிப்பெயர்ச்சி மற்றும் சனிக்கிழமைகளில் இங்கு சனிபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கல்பட்டு

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top