கல்குணம் உத்திராபதீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
கல்குணம் உத்திராபதீஸ்வரர் சிவன்கோயில்,
கல்குணம், குறிஞ்சிப்பாடி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607302.
இறைவன்:
உத்திராபதீஸ்வரர்
இறைவி:
திருகுழல் வடிவம்மை
அறிமுகம்:
சேத்தியாதோப்பில் இருந்து வடலூர் செல்லும் சாலையில் உள்ள மருவாய் கிராமத்தின் கிழக்கில் ஓடும் பரவனாற்றை கடந்து அதன் கரையிலேயே ஒற்றையடி பாதையாக உள்ள வழியாக கல்குணம் சென்றடையலாம். இது கொஞ்சம் ஆபத்தான வழி. 3 கிமீ தூரம் ரோடும் ஜல்லியாகி கிடக்கிறது ஆற்றை கடக்க சரியான வழியில்லை. அதனால் குறிஞ்சிப்பாடியின் தெற்கில் உள்ள ரெட்டிபாளையம் வழி வந்தால் 5 கிமீ தூரத்தில் கல்குணம் அடையலாம். இந்த சிவன்கோயில் முன்னர் மன்மதன் கோயிலாக இருந்து சிவாலயமாக பதவி உயர்த்தப்பட்ட கோயில் ஆகும். கோயில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது, அழகிய சுதை வேலைகள் மண்டபத்தின் முகப்பில் உள்ளன.
இறைவன் உத்திராபதீஸ்வரர் சிறிய லிங்கமாக உள்ளார். கருவறையின் இருபுறமும் விநாயகர், முருகன் உள்ளனர். எதிரில் நந்தி உள்ளது. இறைவி சிறிய அளவில் உள்ள திருகுழல் வடிவம்மை. அருகில் பைரவர் சன்னதியும் உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். சண்டேசரும் தனி சிற்றாலயத்தில் உள்ளார். வடகிழக்கில் நவகிரகங்கள் உள்ளன. சிறிய கோயிலாக இருந்தாலும் கிராமத்தினர் நன்கு பராமரிக்கின்றனர். காலை நேரத்திலேயே சன்னதிகள் விளக்கேற்றப்பட்டு, பூக்கள் சார்த்தப்பட்டு காட்சியளிக்கின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கல்குணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி