கலாசான் புத்த கோவில், இந்தோனேசியா
முகவரி
கலாசான் புத்த கோவில், Jl. ராய யோக்யா – தனி, சூர்யாத்மஜன், தனுரேஜன், யோக்யகர்த்தா, இந்தோனேசியா
இறைவன்
இறைவன்: புத்தர்
அறிமுகம்
கலாசான் இந்தோனேசியாவின் ஜாவாவில் உள்ள 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தக் கோயில் ஆகும். கிழக்கு யோக்யகர்த்தாவிலிருந்து 13 கிமீ கிழக்குப் பகதியில், பிரம்பானான் கோயிலுக்குச் செல்லும் வழியில், ஜாலான் சோலோவின் தெற்கு பக்கத்தில் யோக்யகர்த்தாவிற்கும் சுராகார்த்தாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. நிர்வாக ரீதியாக, இது ஸ்லெமன் ரீஜென்சியின் கலாசான் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
சமஸ்கிருதத்தில் நாகரி எழுத்தில் எழுதப்பட்ட, கி.பி. 778 ஆம் நாளிட்ட கலாசான் கல்வெட்டின்படி, இந்தக் கல்வெட்டானது குரு சங் ராஜா சைலேந்திரவம்சதிலகா (சைலேந்திர குடும்பத்தின் நகை) என்பவரின் விருப்பப்படி இந்த கோயில் அமைக்கப்பட்டது. அவர் மகாராஜா தேஜபூர்ணபன பனங்கரனை (கல்வெட்டின் மற்றொரு பகுதியில் கரியானா பனங்கரன் என்றழைக்கப்படுகிறது) வற்புறுத்தி தாராபவனம் என அழைக்கப்படுகின்ற, (போதிசத்வதேவி) தாராவிற்காக புனித கட்டிடத்தை அமைக்க தூண்டுதல் செய்துள்ளார். கூடுதலாக, சைலேந்திர குடும்பத்தின் சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த பௌத்தத் துறவிகளுக்காக ஒரு விகாரை (மடம்) கட்டப்பட்டது. பனங்கரன் சங்கத்திற்காக (புத்த துறவிகளின் சமூகம்) என்ற கிராமத்தை வழங்கியுள்ளார். இந்த கல்வெட்டின் நாளின்படி நோக்கும்போது இக்கோயில் பிரம்பனன் சமவெளியில் கட்டப்பட்ட கோயில்களில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகக் கருதப்படுகிறது. டச்சு காலனித்துவ காலத்தில் புதுப்பிக்கப்பட்டு ஓரளவு புனரமைக்கப்பட்ட போதிலும், இந்த கோயில் தற்போது மோசமான நிலையில் உள்ளது. அருகிலுள்ள பிற கோயில்களான பிரம்பனன், சேவு, சம்பிசரி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்த கோயில் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதை அறியமுடிகிறது.
காலம்
778 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
யோக்யகர்த்தா
அருகிலுள்ள இரயில் நிலையம்
யோக்யகர்த்தா
அருகிலுள்ள விமான நிலையம்
யோக்யகர்த்தா