Sunday Nov 24, 2024

கறம்பக்குடி ஆனந்தேஸ்வரமுடையார் சிவன்கோயில், புதுக்கோட்டை

முகவரி

கறம்பக்குடி ஆனந்தேஸ்வரமுடையார் சிவன்கோயில், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் – 622302

இறைவன்

இறைவன்: ஆனந்தேஸ்வரமுடையார் இறைவி: அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்

கறம்பக்குடி சிவன்கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி என்னும் ஊரின் மையத்திலேயே அமைந்துள்ளது இத் திருக்கோயில். கறம்பக்குடி பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 39 கிமீ தொலைவிலும், பட்டுக்கோட்டையிலிருந்து 23 கிமீ தொலைவிலும் உள்ளது. இக்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் ஆனந்தேஸ்வரமுடையார், அம்மனின் பெயர் அகிலாண்டேஸ்வரி. வரலாற்று சிறப்பும், பழமை மிக்கதுமான இந்த கோவில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சிதலமடைந்திருந்தது.

புராண முக்கியத்துவம்

சுமார் 1000 வருட பழமையான இத்திருக்கோவிலில் ராஜகோபுரம் உட்பட அனைத்து சன்னதிகளும் செங்கல் கட்டுமானத்தில் கட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் ,அம்பாள், திருச்சுற்றில் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், பைரவர் என தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது. திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பது கூடுதல் சிறப்பு. ராஜகோபுரம் உள்ளிட்ட கோவில் மூலஸ்தான விமானங்களும் இடிந்த நிலையில் கிடந்தன. பல்வேறு காரணங்களால் கோவில் புனரமைப்பு பணி மற்றும் கும்பாபிஷேகம் தடைப்பட்டு வந்தது. கடந்த 100 ஆண்டுகளில் பலமுறை முயற்சி செய்தும் பணிகள் தடைப்பட்டு வந்தன. இந்நிலையில் கறம்பக்குடி சிவன் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. மூலவர் உட்பட அனைத்து சிலை திருமேனிகளும் மண் கொட்டி மூடப்பட்டுள்ளது. கொரானா காரணமாக நிதி சரிவர சேராததால் திருப்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆலய காவல் திரு சிதம்பரம் கூறினார்..

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கறம்பக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

பட்டுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top