கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவார், பாகிஸ்தான்
முகவரி
கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவார், கர்தார்பூர், ஷகர்கர் தாலுகா, நரோவல் மாவட்டம், பஞ்சாப், பாகிஸ்தான் – 51800
இறைவன்
இறைவன்: குருநானக் ஜி
அறிமுகம்
கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவார் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள் நாரோவல் மாவட்டத்தில், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்த நகரமான கர்தார்பூரில் உள்ள சீக்கிய சமய குருத்துவார் ஆகும். இக்குருத்துவார் பாகிஸ்தான் நாட்டின் லாகூரிலிருந்து 120 கிமீ தொலைவிலும், இந்திய நாட்டின் குர்தாஸ்பூர் மாவட்டம், தேரா பாபா நானக்கிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது. இக்குருத்துவார் சீக்கியர்களின் மிக முக்கிய புனிதத்தலங்களில் ஒன்றாகும். ராவி ஆற்றின் கரையில் அமைந்த தேரா பாபா நானக் குருத்துவார், தேரா பாபா தொடருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது. இந்த குருத்வாரா பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள எல்லைக்கு அருகில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய எல்லையில் இருந்து இந்த ஆலயம் தெரியும். இந்திய சீக்கியர்கள் எல்லையின் இந்தியப் பகுதியிலிருந்து தரிசனம் செய்ய அல்லது புனிதமான தரிசனம் செய்வதற்காகப் பெருமளவில் திரள்கின்றனர். கர்தார்பூர் வழித்தடமானது, 9 நவம்பர் 2019 அன்று, பெர்லின் சுவர் இடிந்த ஆண்டு மற்றும் குருநானக்கின் 550வது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்று தருணம் அதிகாரப்பூர்வமாக இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானில் உள்ள தளத்திற்கு விசா இல்லாத அணுகலை அனுமதித்தது. இது உலகின் மிகப்பெரிய குருத்வாரா என்றும் கூறப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
கர்தார்பூர் நகரத்தில் 22 செப்டம்பர் 1539 அன்று மறைந்த சீக்கிய சமய நிறுவனர், குருநானக்கின் சமாதி மீது தர்பார் சாகிப் குருத்துவார் நிறுவப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் அருகே கர்தார்பூரில் அமைந்த தர்பார் சாகிப் குருத்துவராவை, இந்தியப் பகுதியிலிருந்து கண்கூடாக பார்க்கலாம். சீக்கிய சமயத்தை நிறுவிய குருநானக், கர்தார்பூர் தர்பார் சாகிப் நானக் குருத்துவார் அமைந்த கர்தார்பூரில் பதினெட்டு ஆண்டுகள் தங்கி சமயப் பரப்புரையை மேற்கொண்டுள்ளார். மேலும் குருநானக் தனது இறுதிக் காலத்தை 18 ஆண்டுகள் கர்தார்பூரில் கழித்து இறந்த பின், அவரது சமாதி மீது கர்தார்பூர் தர்பார் சாகிப் நானக் குருத்துவார் நிறுவப்பட்டது. கர்தார்பூர் தர்பார் சாகிப் நானக் குருத்துவாரை நிறுவ பாட்டியாலா மன்னர் சர்தார் புபீந்தர் சிங் ரூபாய் 1,35,600 நன்கொடையாக வழங்கினார். 2004ல் இக்குருத்துவார் முற்றிலும் சீரமைத்து கட்டப்பட்டது.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கர்தார்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தேரா பாபா
அருகிலுள்ள விமான நிலையம்
சியால்கோட்