கரைமீண்டார்கோட்டை சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
கரைமீண்டார்கோட்டை சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்,
கரைமீண்டார்கோட்டை, ஒரத்தநாடு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 614019.
இறைவன்:
சுந்தரேஸ்வரர்
இறைவி:
மீனாட்சியம்மன்
அறிமுகம்:
தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி சாலையில் 12கிமீ தொலைவில் உள்ளது. பிரதான சாலையிலிருந்து ஊர் வடக்கில் அரை கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ஊரின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சிவன்கோயில். ஊரின் நிறுத்தம் வாண்டையார் இருப்பு எனவும் ஊர் கரைமீண்டார் கோட்டை / கோட்டையுண்டார் இருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இறைவன் தனியாகவும் அவரது இடப்புறம் அம்பிகை தனியாகவும் கோயில் கொண்டுள்ளனர். மீனாட்சியம்மன் கோயில் என்றே அடையாளம் காட்டப்படுகிறது.
இறைவன் சுந்தரேஸ்வரர் இறைவி மீனாட்சியம்மன் இறைவன் கிழக்கு நோக்கியுள்ளார் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தி, எதிரில் சிறிய நந்தி உள்ளது. கோயில் கருவறை சுவரை ஒட்டி தென்முகன் துர்க்கைக்கு மாடம் அமைத்து வைத்துள்ளனர். கோயில் எதிரில் பெரிய தகரகொட்டகை போடப்பட்டு உள்ளது. சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். மீனாட்சி அம்மனுக்கு கிழக்கு நோக்கிய கருவறையும் அதன் வாயிலில் விநாயகர் முருகன் இருவரும் உள்ளனர். முகப்பு மண்டபத்தில் அழகிய சண்டேஸ்வரி உள்ளார்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கரைமீண்டார்கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி