கருவேலி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
கருவேலி காசி விஸ்வநாதர் சிவன்கோயில்,
கருவேலி, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611108.
திரு.ஐயப்பன் – 99626 59766
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
நாகப்பட்டினத்தின் மேற்கில் செல்லும் வேதாரண்யம் வெளிவட்ட சாலை NH32-ல் ஐவநல்லூர் சந்திப்பில் இருந்து இரண்டு கிமீ தூரம் சென்றால் குறுக்கிடும் ஒடம்போக்கி ஆற்றின் பாலத்தினை தாண்டி வலதுபுறம் செல்லும் விக்கினபுரம் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்று வலது திரும்பினால் கருவேலி கிராமம். பெரியதொரு நெல் விளையும் பகுதி அதன் நடுவில் பெரிய குளத்தின் நான்கு கரைகளில் உள்ள வீடுகள் என சிறிய சிற்றூர் தான் இந்த கருவேலி. இந்த குளத்தின் வடக்கு கரையில் கிழக்கு நோக்கிய சிவன்கோயில். இறைவன் காசி விஸ்வநாதர் இறைவி காசி விசாலாட்சி பல காலமாக பழுதடைந்து இருந்த சிவாலயம் அரன்பணி அறக்கட்டளை- கோவை மற்றும் உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் புத்துயிர் பெற்று வரும் 24.3.2023 வெள்ளிக்கிழமை குடமுழுக்கு காண்கிறது.
கிழக்கு நோக்கிய ஆலயம் இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர். இறைவன் முன்னர் ஒரு முகப்பு மண்டபம் உள்ளது, மண்டபத்தின் வெளியில் நந்தி உள்ளார். இறைவன் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தியாக உள்ளார். கருவறை கோட்டங்களாக தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். கோயில் கட்டுமானம் பெரும்பகுதி கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. விநாயகர் முருகன் மகாலட்சுமி ஆகியோருக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. சூரியன் சந்திரன் பைரவர் ஆகியோருக்கு தனி மாடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பணிகள் துரித கதியில் நடக்கின்றன.
காலம்
800 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கருவேலி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி