Wednesday Dec 18, 2024

கருப்பூர் காட்டீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

கருப்பூர் காட்டீஸ்வரர் சிவன்கோயில், கருப்பூர், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312.

இறைவன்

இறைவன்: காட்டீஸ்வரர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கருப்பூர் கிராமம். கருப்பூர் என்ற இக்கிராமத்தில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப் படுகிறது இந்த சிவன் கோயில். உள்ளே போக முடியாத வண்ணம் முட் செடிகள் மண்டிக்கிடக்கின்றன. சுவாமி சுயம்பு மூர்த்தி . ஸ்ரீ காட்டீஸ்வரர் என்ற திருநாமம். பின்னம்மான நிலையில் உள்ளது. ஸ்ரீ ஆறுமுகர் சிலையும் பின்னப்பட்டு காணப்படுகிறது. நந்திதேவர் கோவிலுக்கு வெளியே உள்ளார். அருகில் இரண்டு குளங்கள் உள்ளன. கர்ப்பகிரகத்தில் பாம்பு புற்றுக்காணப்படுகிறது. அருகில் குடிசை வாழ் மக்கள், உழாவார பணியும் கர்ப்பகிரகத்தில் உள்ள புற்றை அகற்றி தந்தால் கோவில் கட்டி பூஜை செய்ய தயாராக உள்ளார்கள். கோவிலும் குடிசைபகுதிக்கு அருகில் உள்ளது. தொடர்புக்கு திரு முருகன்-994490427, திரு அன்பழகன்-9751547513,

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கருப்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top