கருக்குடி சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
கருக்குடி சிவன்கோயில், கருக்குடி, சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்- 603 401.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சீர்காழியிலிருந்து கருவி முக்குட்டு NH32-ல் சுமார் 10கிமி தொலைவில் அமைந்துள்ள திவ்யதேசம் அண்ணன் கோவில் என்று வழங்கப்படும் திருவெள்ளக்குளம். இந்தக் கோயில் பெருமாள், திருப்பதி ஸ்ரீநிவாசருக்கு அண்ணனாகக் கருதப்படுவதால் இக்கோவில் அண்ணன் கோவில் என்றழைக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன் கோயில் எதிரில் செல்லும் சாலையில் 5 கிமீ சென்றாலும் இந்த வெள்ளகுளம் அடையலாம். பிரதான நெடுஞ்சாலையில் அண்ணன் கோவில் ஆர்ச் இடது புறம் உள்ளது வலது புறம் நேர் எதிரில் கருக்குடி சாலை உள்ளது. இந்த சிறிய சாலை வழி சென்று கருக்குடி அடைந்து, இந்த கருக்குடியின் வடக்கில் வயல் காட்டில் சிமென்ட் அச்சுக்கல் பாதை ½ கிமி தூரம் போடப்பட்டுள்ளது அதன் வழி சென்றால் இந்த வேதபுரீஸ்வரர் எனும் பெயர் கொண்ட இறைவனை காணலாம். பல காலம் ஒற்றை லிங்கமூர்த்தியாக தனித்திருந்த லிங்கத்திற்கு கிழக்கு நோக்கிய தகர கொட்டகை அமைத்து எதிரில் ஒரு நந்தி பலிபீடம் ஆகியனவற்றையும் அமைத்துள்ளனர். ஊர் மக்கள். கோயிலை சுற்றி நந்தவனமும் உள்ளது. கருக்குடியை சேர்ந்த அன்பரே முறையாக பூஜை செய்து வருகிறார். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
திருவிழாக்கள்
பிரதோஷம் சிவராத்திரி, அன்னாபிஷேகம் போன்ற விழாக்களும் நடத்தப்பெறுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கருக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி