கரிக்ககம் சாமுண்டி தேவி திருக்கோயில், கேரளா
முகவரி
கரிக்ககம் சாமுண்டி தேவி திருக்கோயில், கரிக்ககம், திருவனந்தபுரம் மாவட்டம், கேரள மாநிலம் – 695007.
இறைவன்
இறைவி: சாமுண்டி பகவதி
அறிமுகம்
கரிக்ககம் சாமுண்டிகோயில் அல்லது கரிக்ககம் தேவி கோவில் என்பது கேரளத்தின் திருவனந்தபுரத்தில், சாமுண்டி தேவிக்கு அமைக்கப்பட்ட ஒரு கோயில் ஆகும். இந்த கோயில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்தது. கரிக்ககமானது திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலுக்கு வடக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தேவி சாமுண்டியின் அவதாரமான கரிக்ககத்தம்மனின் சிலையானது பஞ்சலோகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஸ்ரீசாமுண்டி தேவி, ரத்தசாமுண்டி தேவி, பாலசாமுண்டிதேவி என மூன்று வடிவங்களில் சாமுண்டி தேவி வழிபடப்படுகிறார். மன்னர் ஆட்சிக்காலத்திலிருந்து இன்றுவரை இக்கோயிலில் பல வழக்குகள் சத்தியப் பிரமாணம் செய்வதன் மூலம் உண்மைகள் நிரூபிக்கப்பட்டு தீர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது.
புராண முக்கியத்துவம்
காளியின் உக்கிர வடிவினளாக சாமுண்டி கருதப்படுகிறாள். ஆனால், இங்கு அதே சாமுண்டி அருகிருகே உள்ள மூன்று வெவ்வேறு வடிவங்களில் வழிபடப்படுகிறார். முதன்மை ஆலயத்தில் இடது பக்கமாக தேவியின் சிலை அமைந்துள்ளது. இக்கோயிலில் சாமுண்டியை ஸ்ரீசாமுண்டி தேவி, ரத்தசாமுண்டி தேவி, பாலசாமுண்டிதேவி என மூன்று வடிவங்களில் வழிபடப்படுவதல்லாமல், மேலும் சாஸ்தா, கணபதி , யக்ஷியாமா, புவனேசுவரி , அயிரவல்லி யோகேஷ்வரர் ஆகியோரும் சிற்றாலயங்களில் உள்ளனர். மேலும், தேவி கோயிலுக்கு வடக்கே உள்ள பழைய இல்லம் குரு மந்திரம் என்று அறியப்படுகிறது. இது தேவியை இங்கே அழைத்து வந்த யோகீஸ்வரனின் பரம்பரை இல்லம் அல்லது தாரவாடு என கருதப்படுகிறது. இரத்த சாமுண்டி: இந்தக் கோயிலில் இரத்த சாமுண்டி சிற்றாலயத்தில் தேவியின் சிலை இல்லை. ஆனால் அதற்கு பதிலாக தேவியின் சுவர் சித்திம் உள்ளது. மன்னர் ஆட்சிக்காலத்திலிருந்து இக்கோயிலில் பல வழக்குகள் சத்தியப் பிரமாணம் செய்வதன் மூலம் உண்மைகள் நிரூபிக்கப்பட்டு தீர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. 21 பணம் அல்லது 21 காசுகள் கட்டணமாகச் செலுத்தி இந்த வழக்கு நடத்தப்படுகிறது. குற்றம்சாட்டியவரும் குற்றவாளியும் கோயில் குளத்தில் நீராடி சாமுண்டி அம்மன் முன் காணிக்கை செலுத்தி விளக்கேற்றி தீபச்சுடரின்மேல் சத்தியம் செய்வார்கள். இங்கு யாரும் பொய் சத்தியம் செய்வதில்லை என்று நம்பப்படுகிறது. அவ்வாறு பொய் சத்தியம் செய்தால் தேவியால் தண்டிக்கப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். இதனால் இங்கு இன்றும் பல சிக்கலான வழக்குகள் தீர்க்கப்படுகின்றன. ரத்த சாமுண்டியின் சன்னிதி நடை அப்போது மட்டுமே திறக்கப்படும். பாலா சாமுண்டி: பாலா சாமுண்டி தேவியானவர், இந்த பெயருக்கு ஏற்றார் போல, குழந்தைப் பருவ தோற்றத்தில் உள்ளார். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி, தொட்டிகள் பொம்மைகள் போன்றவற்றை வைத்து வழிபடுகின்றனர். இந்த தேவியை வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட நோய்கள் குணமாகும் என நம்புகின்றனர். நகர் காவு: நாகர் காவு என்பது சாமுண்டி தேவி கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு கோயில் காடு அல்லது கோயில் தோப்பாகும். கோயிலுக்குச் சொந்தமான இந்தப் பகுதியில் கோயில் ஒரு குளம் அமைந்துள்ளது. இந்த நகர் கவில் ஏராளமான மரங்கள், கொடிகள் மருத்துவ குணமுள்ள தாவரங்களும் நிறைந்ததாக உள்ளது. பக்தர்கள் தங்களுக்கு உள்ள சர்ப்ப தோசத்தை அகற்ற, ஒவ்வோரு மாதமும் ஆயில்ய நாளில் இங்குவந்து நாகருக்கு ஆயில்ய பூசை, நூரும் பாளம், நகர் அர்ச்சனை போன்ற வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
நம்பிக்கைகள்
முதன்மைக் கருவறையில் உள்ள சாமுண்டி தேவியானவர் சாந்த சொரூபியாக கருதப்படுகிறார். ஆனால் ரத்த சாமுண்டியோ துடியான தெய்வமாக கருதப்படுகிறார். ஆனால் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுபவராக கருதப்படுகிறார். ராத்த சாமுண்டி தேவிக்கு படையலிட்டு வேண்டினால், எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளும், சிக்கல்களும் அகலும் என்றும், நாட்பட்ட நோய்கள் குணமாகும் எனவும் நம்பப்படுகிறது. பாலா சாமுண்டி தேவியை வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட நோய்கள் குணமாகும் என்று நம்புகின்றனர் மற்றும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி, தொட்டிகள் பொம்மைகள் போன்றவற்றை வைத்து வழிபடுகின்றனர். பக்தர்கள் தங்களுக்கு உள்ள சர்ப்ப தோஷத்தை அகற்ற, ஒவ்வோரு மாதமும் ஆயில்ய நாளில் நாகர் காவு கோயிலில் உள்ள நாகருக்கு ஆயில்ய பூஜை, நூரும் பாளம், நகர் அர்ச்சனை போன்ற வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
இந்தக் கோயிலில் தேவி சாமுண்டியின் அவதாரமான கரிக்ககத்தம்மனின் சிலையானது பஞ்சலோகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஸ்ரீசாமுண்டி தேவி, ரத்தசாமுண்டி தேவி, பாலசாமுண்டிதேவி என மூன்று வடிவங்களில் சாமுண்டி தேவி வழிபடப்படுகிறார். மன்னர் ஆட்சிக்காலத்திலிருந்து இன்றுவரை இக்கோயிலில் பல வழக்குகள் சத்தியப் பிரமாணம் செய்வதன் மூலம் உண்மைகள் நிரூபிக்கப்பட்டு தீர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது.
திருவிழாக்கள்
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஏழு நாள் திருவிழாவும் பொங்கல் வழிபாடும் நடத்தப்படுகின்றன. இந்த நாளில் ஆயிரக்கணக்கில் பெண்கள் கோயிலைச் சுற்றி பொங்கலிட்டு வழிபடுவர். (பொங்கலை வழிபாடு நடக்கும் நாளுக்கு முந்தின நாளன்று தங்கத் தேரில் தேவி கோயிலை சுற்றி பவணி வருவார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கரிக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவனந்தபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்