கந்தகுமாரன் சிவன்கோயில், கடலூர்
முகவரி
கந்தகுமாரன் சிவன்கோயில், கந்தகுமாரன், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம்,
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சோழ அரசர்களாகிய முதலாம் ஆதித்யன் முதல், முதலாம் இராஜேந்திர சோழன் வரையிலான காலங்களில் கேரளாவிலிருந்து வந்த பழுவேட்டரையர்கள், நிலக்கிழார்களாக இருந்து பழுவூரை தலைநகராகக் கொண்டு அரியலூர் பகுதியை ஆண்டு வந்தனர். குமரன் கந்தன், குமரன் மறவன், கந்தன் அமுதன், மறவன் கந்தன் போன்றோர் பழுவேட்டரையர்கள் குடும்பத்தில் மன்னர்களாக இருந்தனர். சோழர்களின் நிலைப்படை தங்கி இருந்து வீரநாராயணன் ஏரியை வெட்டியது, அது குமரன் கந்தன் பழுவேட்டரையர் தலைமையாலான குழுவாக இருக்கலாம், இவர்கள் பாடியமைத்து தங்கிய இடமே இன்றைய கந்தகுமாரன் எனும் சிற்றூர், இது வீராணம் ஏரியின் கரையிலுள்ளது. இவ்விடத்தில் ஒரு சிவாலயம் இருந்து சிதைவுற்றுபோனது, பழம் பெருமையில் மீதமிருந்தது, அதில் இருந்த விநாயகரும் லிங்கமும் மட்டுமே இப்போது ஒரு மரத்தடியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. காட்டுமன்னார்கோயிலில் இருந்து வீராணம்கரை வழி வந்து கந்தகுமாரன் என்ற இடத்தில் கரையில் இருந்து இறங்கி புத்தூர் வழி சிதம்பரம் செல்கிறது சாலை. அப்படி கீழிறங்கும் சாலையின் ஓரத்திலேயே உள்ளது இந்த கோயில். #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கந்தகுமாரன்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி