கண்ணூர்ப்பட்டி ஸ்ரீபெரியாண்டவர் (ஆதி பராசக்தி) கோயில், நாமக்கல்
முகவரி :
கண்ணூர்ப்பட்டி ஸ்ரீபெரியாண்டவர் (ஆதி பராசக்தி) கோயில்
கண்ணூர்ப்பட்டி,
நாமக்கல் மாவட்டம் – 637014.
இறைவி:
ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி / ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி
அறிமுகம்:
ஸ்ரீபெரியாண்டவர் கோயில் மகிமை வாய்ந்த ஒரு சக்தி ஸ்தலம். இந்தக் கோயில், தமிழ்நாட்டில் சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் என்னும் ஊரிலிருந்து கிழக்குத் திசையில் சுமார் 2 மைல் தொலைவில் அமைந்திருக்கும் கண்ணூர்ப்பட்டி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீஅம்பாள் ஆதி பராசக்தியின் அம்சமாகும். இந்த அம்பாளுக்கு ‘ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி’ என்றும் ‘ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி’ என்றும் பெயர்கள்.
ஆனால், வழக்கில் அனைவரும் அன்னையை ‘ஸ்ரீபெரியாண்டவர்’ என்றே அழைக்கின்றனர். இக்கோயிலில் ஆதிபராசக்தி கடும் உக்ரமும் மஹாகோபமும் பொருந்தியவளாய் விளங்குகிறாள். தீயசக்திகளை நாசமாக்கிவிடும் பெரும் சக்திகொண்ட தெய்வீக யந்திரங்கள் இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்ரீபெரியாண்டவர் கோயில் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. வேறேங்குமே இம்மாதிரி அமைப்பும், தெய்வீக சக்தியும் கொண்ட கோயில் கிடையாது, என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கண்ணூர்ப்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி