கண்ணம்பாடி-பெரம்பூர் ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
கண்ணம்பாடி-பெரம்பூர் ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில்,
கண்ணம்பாடி-பெரம்பூர், நீடாமங்கலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614404.
இறைவன்:
ஏகாம்பரேஸ்வரர்
இறைவி:
காமாட்சியம்மன்
அறிமுகம்:
நீடாமங்கலத்தில் இருந்து கோரைஆற்றின் கரையோரமாக செல்லும் சாலையில் சென்றால் 5 கிமீ தூரத்தில் பெரம்பூர் உள்ளது. இந்த பெரம்பூரின் ஒரு பகுதியாக கண்ணம்பாடி உள்ளது. பெரம்பூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. கண்ணம்பாடியில் கிழக்கு நோக்கிய சிவன்கோயில் ஒன்றுள்ளது. இறைவன் –ஏகாம்பரேஸ்வரர் இறைவி- காமாட்சியம்மன் கோயில் வளாகம் பெரியதாக உள்ளது. கிழக்கில் வாயில் இல்லை, மேற்கில் சிறிய வாயில் உள்ளது. வளாகத்தில் பல வண்ண மலர்களும் மரங்களும் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. இறைவன் கிழக்கு நோக்கியுள்ளார் இறைவி தெற்கு நோக்கி அதே மண்டபத்தில் ஒரு மாடம் போன்ற கட்டுமானத்தில் உள்ளார். ஒரு மேடையில் மாரியம்மன் போன்ற இரு பெண் தெய்வங்கள் உள்ளன. இரு கருவறைகளையும் ஒரு மண்டபம் இணைக்கிறது. இறைவன் கருவறை வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். இறைவன் எதிரில் சிறிய நந்தி உள்ளது. கருவறை கோட்டங்களில் தென்முகன் மற்றும் துர்க்கை மட்டும் உள்ளனர். சண்டேசர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார். தனியாருக்கு சொந்தமான கோயில் அதனால் நன்கு பராமரிக்கப்படுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
தனியாருக்கு சொந்தமான கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரம்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி