கண்டமங்கலம் திருநாரிஸ்வரத்து மஹாதேவர் கோயில், விழுப்புரம்
முகவரி
கண்டமங்கலம் திருநாரிஸ்வரத்து மஹாதேவர் கோயில், கண்டமங்கலம், விழுப்புரம் மாவட்டம் – 605102.
இறைவன்
இறைவன்: திருநாரிஸ்வரத்து மஹாதேவர்
அறிமுகம்
சென்னையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் விழுப்புரம் வட்டத்தில் உள்ள கண்டமங்கலம் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றுடன் எளிமையாகக் காணப்படுகிறது. இக்கோயிலில் புராதன சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. இக்கோயில் பராந்தக சோழன் காலக் கோயிலாகும். கோட்டங்கள் வெற்றிடமாக காணப்படுகின்றன. கண்டமங்கலம் என்னும் இவ்வூர் சோழர் காலத்தில் ஸ்ரீகண்டராதித்த மதுராந்தக மங்கலம் என்ற பெயரில் விளங்கியது. செம்பியன் மாதேவியின் கணவனும், உத்தமசோழனின் தந்தையும், மேற்கெழுந்தருளிய சிவஞானியுமான கண்டராதித்தன் பெயரில் இவ்வூர் விளங்கியதை இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
புராண முக்கியத்துவம்
கண்டமங்கலம் எனும் இவ்வூர் சோழர் காலத்தில் ஸ்ரீ கண்டராதித்த மதுராந்தக மங்கலம் என்ற பெயரில் விளங்கியது. கண்டராதித்த மதுராந்தகன் என்ற செம்பியன் மாதேவியின் கணவனும், உத்தம சோழனின் தந்தையும், மேறகெழுந்தருளிய சிவஞானியுமான கண்டராதித்தன் பெயரில் இவ்வூர் விளங்கியதை கiவெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவ்வூரில் சிவன் கோயில் ஒன்றும், விஷ்ணு கோயில்கள் இரண்டும் என மூன்று கோயில்கள் இருந்துள்ளன. சிவன் கோயில் திருநாரிஸ்வரம் என வழங்கப்பட்டது. திருநாரிஸ்வரத்து மஹாதேவர் என இறைவன் வழங்கப்பட்டார். இரண்டு விஷ்ணு கோயில்களில் ஒன்று செய்தாங்கி விண்ணகர் என்றும் செயந்தாங்கி விண்ணகரப் பெருமான் என்றும் அழைக்கப்பட்டுள்ளார். திருவாய்பாடி ஆழ்வார் என்ற மற்றொரு விஷ்ணு. கோயிலை முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கண்டமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விழுப்புரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை