கணவாய்ப்பட்டி சிவன் கோயில், திண்டுக்கல்
முகவரி :
கணவாய்ப்பட்டி சிவன் கோயில்,
கணவாய்ப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் – 624308.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் கோபால்பட்டியை அடுத்து 2 கிமீ தொலைவில் கணவாய்ப்பட்டி எனும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. காரைக்குடி சிங்கம்புணரியில் இருந்து வருபவர்கள் நத்தம் வழியே வந்தடையலாம். பெருவழிப்பாதையில் கண்வாய்ப்பட்டி குளமானது இன்றளவும் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்தள்ள குளத்தின் கரையில் இந்த சிவன் கோவில் இருந்துள்ளது. இந்தக்குளத்தை கோவிலின் வடமேற்கில் காணமுடியும் இன்றும் இக்குளத்தில் முற்கால மனிதர்கள் தங்கள் கல்ஆயுதங்களை கூர்மையாக்க பயன்படும் கூர் தீட்டும் குழி உள்ளதை காணமுடியும். இந்தக்கல் 10 அடி உயரத்தில் இருக்கிறது. காலப்போக்கில் குளத்தின் நீர் பெருக பெருக நெடுங்கல் கனத்தால் அமிழ்ந்துள்ளது.
இக்கோவில் தற்போது அமைந்துள்ள இடத்தின் வடக்கு பக்கமாக கற்கோவிலின் உடைந்த பகுதிகளைக் காணமுடியும். கோவிலின் கருங்கற்கள் காலப்போக்கில் சேதமடைந்தும் மக்களின் பயன்பாட்டிற்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். கி.பி. 800 ஆம் ஆண்டு முதல் கி.பி 900 வரை மதுரையை ஆட்சிசெய்த இடைக்காலப்பாண்டியர்களின் காலத்தில் இக்கோவில் வழிபாட்டில் இருந்துள்ளது. சில நூற்றாண்டுகளில் கருவறையில் வைக்கப்பட்ட மணற்பாறை லிங்கமானது தேய்மானம் ஏற்பட்டதால் 1100 முதல் 1200 ல் தற்போதை லிங்கத்தை வைத்துள்ளனர். இக்கோவில் கருவறை மட்டுமே உள்ள ஒற்றைக்கருவறை மட்டுமே உள்ளவாறு அமைத்துள்னர்.
இப்போர்க் காலங்களில் இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் லிங்கத்தை கோவிலில் இருந்து பாதுகாக்க எண்ணி மண்ணில் புதைத்து வைத்துள்ளனர். மக்கள் எண்ணியது போலவே கோவில் இடித்து தகர்க்கப்பட்டது. காலங்கள் உருண்டோடின மண்மேடாய்ப்போன இவ்விடத்தில் சீரமைப்பு பணி செய்யும் போது 1994 ஆம் ஆண்டு சிவலிங்கத்தின் தலைப்பகுதி மட்டும் தெரிந்துள்ளது. பின்னர் தோண்டிப்பார்த்தபோது தற்போதுள்ள சிவலிங்கம் அப்படியே சேதப்படாமல் இருந்துள்ளது.
காலம்
கி.பி. 800 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கணவாய்ப்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டுக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை