கட்டளைச்சேரி சிதம்பரேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
கட்டளைச்சேரி சிதம்பரேஸ்வரர் சிவன்கோயில் கட்டளைச்சேரி, குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்
இறைவன்
இறைவன் : சிதம்பரேஸ்வரர்
அறிமுகம்
குத்தாலம் – குறுக்கை சாலையில் உள்ள திருமங்கலத்தின் கிழக்கில் ஓடும் விக்கிரம சோழனாற்றை கடந்து ஒரு கிமி தூரம் சென்றால் கட்டளைச்சேரி உள்ளது. கோயிலுக்கு செய்யப்படும் தருமத்தை கட்டளை என கூறுவார்கள். அறக்கட்டளை என சொல்வோமல்லவா, அப்படி இந்த கிராமத்தினை கட்டளையாக அருகாமை கோயிலுக்கு மன்னர்கள் கொடுத்திருக்கலாம். அதனால் இந்த ஊருக்கு பெயரே கட்டளை-சேரி என ஆனது. இந்த கிராமத்தில் ஒரு சிவன் கோயிலும் ஒரு வைணவ கோயிலும் உள்ளன. இங்கு அரை ஏக்கர் பரப்பில் கிழக்கு நோக்கிய சிவன்கோயில் உள்ளது. கிழக்கு பகுதி வாயில் நிரந்தரமாக மூடப்பட்டுவிட தெற்கு வாயில் வழிதான் சென்றுவர உள்ளது. இறைவன் – சிதம்பரேஸ்வரர் இறைவியின் பெயர் தெரியவில்லை. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. கோயிலின் அர்ச்சகர் ஐந்தாறு கிமி தூரத்தில் உள்ள முருகமங்கலத்தில் இருந்து வருகிறார். எப்பொழுது வருகிறார், என்றைக்கு வருகிறார் என்று யாருக்கும் தெரியாது! வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பூஜை!! போதாக்குறைக்கு ஒரு அல்லேலுயா கட்டிடமும் இதே தெருவில் வந்து விட்டது. உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட, தன்னம்பிக்கை கொடுக்க நாம் கிராம சிவாலயம் செல்வது நம் கடமையாகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கட்டளைச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி