கடம்பாக்குடி உலகம்மாள் திருக்கோயில், இராமநாதபுரம்
முகவரி :
கடம்பாக்குடி உலகம்மாள் திருக்கோயில்,
கடம்பாக்குடி, தொண்டி,
இராமநாதபுரம் மாவட்டம் – 623407.
இறைவி:
உலகம்மாள்
அறிமுகம்:
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு மேற்கே கடம்பாக்குடி. அங்கு ஒரு சூலம்தான் உலகம்மாளாக உருவகப்படுத்தப்பட்டு வழிபடப்படுகிறாள்.
புராண முக்கியத்துவம் :
சேதுபதிராஜா வேட்டைக்குச் சென்றுவிட்டு, தென் கடற்கரையோரமாக அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது கடல் அலைகளுக்கிடையே எலுமிச்சை பழம் குத்தப்பட்டு சூலாயுதம் ஒன்று மிதந்து வருவதைக் கண்டார் ராஜா. அதை எடுத்து குலதெய்வத்தை நினைத்து ஊர் எல்லையில் ஊன்றி விட்டு (நட்டு வைத்து விட்டு) பூஜை செய்து விட்டு திரும்பினார்.
குறி சொல்லும் பெண் வந்து குறிசொல்ல, ஏழு மாரியாத்தாக்களில் இவள்தான் மூத்தவள். முதலில் இவளுக்குக் கூழ் ஊற்றிய பிறகுதான் மற்ற அம்மன்களுக்கு கூழ் படைப்பு. ஊருக்குக் கிழக்கே இவள் இருந்தால்தான் வளம் கொழிக்கும் என்று நம்பிய மக்கள், அங்கே பின்நாளில் கோயில் எழுப்பினர்.
நம்பிக்கைகள்:
இந்த அம்மன் ஆலயத்தில் குழந்தை வரம் வேண்டி சென்றாள், அங்கே பூசாரி சேலை முந்தானையில் குங்குமம் இட்ட எலுமிச்சம் கனியை கொடுப்பார். மறு ஆண்டு குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடம்பாக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தேவக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை