ஓரத்தூர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
ஓரத்தூர் சிவன்கோயில்,
ஓரத்தூர், பூதலூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் – 613602.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் உள்ள விண்ணமங்கலத்தில் இருந்து வலதுபுறம் செல்லும் சாலையில் நான்கு கிமீ சென்று வலது புறம் திரும்பினால் ஓரத்தூர் கிராமம். இவ்வூர் சமணம் செழித்திருந்த பகுதி என கூறலாம். ஓரத்தூர் ஊருக்குள் ஒரு சமணர் சிற்பம் இருக்க காணலாம். இந்த ஓரத்தூர் கிராமத்திற்கு திரும்பும் சாலைக்கு ½ கிமீ முன்னதாக வலதுபுறம் உள்ள வயல் வெளியின் நடுவில் உள்ளது ஒரு பெரிய சிவலிங்கமும் ஒரு பெரிய நந்தியும்.
இவர்கள் இருவரும் ஒரு கீற்று கொட்டகையில் உள்ளனர். லிங்க மூர்த்தியின் ஆவுடையாரின் கீழ் பகுதியை காணவில்லை. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது போல நல்லோர் சிலர் இம்மூர்த்தி வயல்வெளி வெயிலில் வாடக்கண்டு அதற்க்கு ஒரு கோயில் எழுப்ப எண்ணி, ஆரம்பிக்கப்பட்ட அப்பணி சிமென்ட் தூண்களுடன் கூடிய மண்டபமாக ஒன்று கட்டப்பட்டு பாதியில் நிற்கிறது. விரைவில் அழகிய திருக்கோயிலாகவும், ஊராரின் இஷ்ட தெய்வமாக விளங்கவும் வேண்டுவோம்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஓரத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி