ஓரத்தூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
ஓரத்தூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
ஓரத்தூர், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611102.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
நாகை-வேதாரண்யம் சாலையில் உள்ள பாப்பாகோயிலில் இருந்து விக்கினபுரம் செல்லும் சாலையில் 2 கிமீ தூரம் வந்து, நரியங்குடியில் இடதுபுறம் செல்லும் ஓரத்தூர் சாலையில் திரும்பி 3கிமீ சென்றால் ஓரத்தூர் கிராமத்தை அடையலாம்.
பிரதான சாலையின் வலது புறம் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியும் அதனருகில் கமலா நயன வாசுதேவ பெருமாள் கோயில் ஒன்றும், சாலையின் இடதுபுறம் உள்ள ஆர்ச் வழியாக உள்ளே சென்றால் பெரிய திடல் பரப்பில் கிழக்கு நோக்கிய சிவாலயமும் அதன் வடபுறம் பெரிய குளம் ஒன்றும் உள்ளது. குளக்கரையில் சிறிய விநாயகர் கோயில் ஒன்றும் உள்ளது. அகத்தியர் வழிபட்ட 164 தலங்களில் இந்த தலமும் ஒன்று. அதனால் இங்கே இறைவன் பெயர் அகத்தீஸ்வரர் இறைவி அகிலாண்டேஸ்வரி
இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார் வாயிலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டு அருள்பாலிக்கிறார். முகப்புமண்டபம் அமைந்துள்ளது. அதன் வெளியில் ஒரு மண்டபத்தில் நந்தி உள்ளார். அதன் முன்னம் கொடிமர விநாயகர் உள்ளார். கொடிமரம் இல்லை. நீண்ட தகர கொட்டகை அமைந்துள்ளது. கருவறை கோட்டங்களில் தென்முகனுக்கு தனி கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு உள்ளன. துர்க்கை மங்களதுர்க்கை என போற்றப்படுகிறார், திருமண வரம் வேண்டி வருவோர்க்கு அருள்பாலிக்கும் அன்னையாக உள்ளார். வடகிழக்கில் பெரிய பாதிரி மரத்தின் கீழ் சில நாகங்கள் வரிசையாக உள்ளன. வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய பைரவர் மாடம் ஒன்றில் உள்ளார்., அருகில் நவகிரகங்களும் உள்ளன. இன்றைய தேதியில் குடமுழுக்கு கண்டு அழகுடன் காட்சியளிக்கிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஓரத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி