ஒளிமதி வஜ்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
ஒளிமதி வஜ்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், ஒளிமதி, நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614 404.
இறைவன்
ஒளிமதி வஜ்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், ஒளிமதி, நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614 404.
அறிமுகம்
திருவாரூர் மாவட்டத்தில் . நீடாமங்கலத்தில் இருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஒளிமதி. சந்திரனின் சாபம் போக்கிய ஈசன், வஜ்ரபுரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறார். அம்பாளின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. கோயில் சிறிய கோயில் தான், பல்லாண்டு காலம் சிதிலமடைந்து கிடந்த இக்கோயில் தற்போது சிறிய கோயிலாக வடிவம் பெற்றுள்ளது. கோயிலோ மூர்த்தியோ சிறிதெனினும், கீர்த்தி மிகப்பெரிது. பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது கிராமம். இங்கு வடகிழக்கு மூலையில் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார்.இறைவன். இறைவி தெற்கு நோக்கி உள்ளார். கருவறை வாயிலில் விநாயகர் முருகன் உள்ளனர். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளும் இங்கு வந்து வழிபட்டுள்ளார்கள் அவரது சிறிய சிலையும் விநாயகர் அருகே உள்ளது. கருவறை கோட்டம், பரிவார தேவதைகள் என ஏதுமில்லை , சண்டேசர் மட்டும் உள்ளார், நவகிரகங்கள் உள்ளன. இந்து அறநிலையதுறையின் கட்டுபாட்டில் உள்ளது. ஒரு கால பூஜை கோயில் நடைபெறுகிறது. கோயில் தெருவில் ஓர் வீட்டில் சாவி உள்ளது.
புராண முக்கியத்துவம்
சந்திரனின் பொலிவையும் தேஜஸையும் கண்டு, தன் 27 நட்சத்திரப் பெண்களையும் அவருக்கு மணம் முடித்து வைத்தார், தட்சன். சிலகாலம் கழிந்த நிலையில் 27 பெண்களில் ஒருத்தியைத் தவிர மற்ற 26 பேரும் வாடிப்போன முகத்துடன் சோகமாக இருந்ததை அறிந்து ஏனென்று கேட்க 27 மனைவிமார்கள் மீதும் அன்பும் பாசமும் வைத்திருந்தாலும், ரோகிணி மீது மட்டும் தனி பிரியம் கொண்டு சந்திர பகவான். அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார். இதனால் ஆவேசமான தட்சன், ”என் 26 மகள்களின் மனதை காயப்படுத்திய நீ மட்டும் சுகவாசியாக இருக்கிறாயா? அவர்கள் நிம்மதியை இழந்து தவிக்கும் போது, நீ மட்டும் நிம்மதியும் சந்தோஷமுமாக உலா வருகிறாயா? நீ அழகன் என்கிற கர்வம்தானே இப்படி நடக்க வைக்கிறது, உன்னில் இருந்து வரும் ஒளிதானே உனக்கு அழகு அந்த தண்ணொளி மொத்தமும் இன்றோடு அழியட்டும். உன்னில் இருக்கிற வெளிச்சம் அனைத்தும் மங்கி, இருள் கவியட்டும்” எனச் சாபமிட்டார் தட்சன். இதனால் ஒளியை இழந்து, இருள் படர்ந்த முகத்துடன் நின்றார் சந்திரன். சந்திரனின் நிலை கண்டு வருந்தி 27 சகோதரிகளும் ஒன்று சேர்ந்து, சந்திர பகவான் தனது பழைய பொலிவைப் பெறவேண்டும் எனச் சிவனாரை நோக்கித் தவமிருந்தனர். அதில் மகிழ்ந்த சிவனார், சாபத்தினை முற்றிலும் நீக்க இயலாது, ஒளி தேயவும், பின்னர் வளரவும் செய்யும் என நிவர்த்தி கொடுத்தார். . சந்திரனுக்காக 27 நட்சத்திரப் பெண்கள் தவமிருந்ததும், அவரின் சாபம் போக்கி சிவனார் அருளியதுமான திருத்தலம் தான் இந்த ஒளிமதி. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
நம்பிக்கைகள்
இங்கு 27 நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் வந்து வழிபடுவது சிறப்பு, முழு நிலவு நாளில் இவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதால் உங்களுக்கு சந்திரபலம் கூடும், முகம் தேஜஸ் பெரும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஒளிமதி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நீடாமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி