ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், சேலம்
![](https://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/ethapur-sri-sambamoortheeswarar-temple-salem.jpg)
முகவரி
அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், ஏத்தாப்பூர் – 636 117. சேலம் மாவட்டம். போன்: +91- 4282 – 270 210.
இறைவன்
இறைவன்: சாம்பமூர்த்தீஸ்வரர் இறைவி: மனோன்மனி
அறிமுகம்
சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் பழமையான மற்றும் புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். சூரிய பகவான் மாசி முதல் வாரத்தில் சிவபெருமான் மீது தனது கதிர்களை பரப்பி தனது பூஜையை செய்கிறார். சப்த ரிஷிகளில் ஒருவரான (ஏழு பெரிய ரிஷிகள்) வசிஷ்டரால் எத்தாபூர் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலில் சாம்பமூர்த்தி, லட்சுமி கோபாலசுவாமி, மனோன்மணி அம்மையார் சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
சிவனுக்கு அழைப்பு விடுக்காமல், தட்சன் தன்னலம் கருதி ஒரு யாகம் நடத்தினான். யாகத்திற்கு செல்ல வேண்டாம் என அம்பாளிடம், சிவன் சொல்லியிருந்தும் அவர் மனம் பொறுக்காமல் சென்றுவிட்டார். இதனால், சிவன் கோபம் கொண்டார். தனித்திருந்த அவர், மனஅமைதி வேண்டி இத்தலத்தில் தங்கினார். அம்பாள், சிவனின் கோபம் தணிக்க வேண்டி தனது அண்ணன் மகாவிஷ்ணுவுடன் வந்து சுவாமியை வணங்கி தவமிருந்தார். இங்குள்ள வில்வ மரத்தின் அடியில் சிவன் காட்சிதந்து அம்பாளை மன்னித்தார். இவ்விடத்தில், சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் இம்மரம் உள்ளது. பிரிந்துள்ள தம்பதியர்கள் இம்மரத்தை சுற்றி வந்து சுவாமியை வணங்கினால் ஒற்றுமையாக வாழ்வர் என்பது நம்பிக்கை. இந்திரன் தனது தலைமை பதவி நீடிக்க இறைவனை வேண்டி யாகம் நடத்தினான். அந்நேரத்தில் கவுதமர், இந்திராணியிடம் ஓர் அழகிய மலரைக்கொடுத்தார். அதன் அழகில் மயங்கிய அவள், யாகத்தில் மனம் செலுத்தாமல், கவனக்குறைவாக இருந்தாள். இதனால், இந்திரனின் வேள்வி வெற்றி பெறவில்லை. கோபம்கொண்ட இந்திரன் தன் மனைவியின் கவனத்தை திசை திருப்பி தன்னிடமிருந்து பிரித்த கவுதமமுனிவரையும், அவரது மனைவியையும் பிரியும்படி சபித்தான். மனைவியைப்பிரிந்த கவுதமர், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார். ஓர் மாசி மாதத்தில் சுவாமியை சூரியன் பூஜித்த நேரத்தில் இறைவன் அவருக்கு காட்சி தந்து, சாப விமோசனம் தந்தார். பின், முனிவர் தனது மனைவியுடன் சேர்ந்தார்.
நம்பிக்கைகள்
சுவாமியை வணங்கிட குடும்ப பிரச்னைகள், நோய்கள் தீரும், நினைத்த செயல்கள் நடக்கும், சதுர்வேத லிங்கங்களை வணங்கிட கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
பஞ்சபூத தலங்களில் இது நீர் தலம். வசிஷ்டமுனிவர் இங்கு வந்து நதியில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இத்தலத்து சண்முகர் முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகங்களுடன் காட்சி தருவது சிறப்பு. வலது பக்கம் திரும்பிய ஆவுடையாருடன் சதுர்வேத லிங்கங்கள், பஞ்சலிங்கங்கள், ஜேஷ்டாதேவி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் பிரதானவிநாயகர். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மூன்று நிலைகள் உடையது.
திருவிழாக்கள்
தை பிரம்மோற்ஸவம், பவுர்ணமி பூஜை
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஏத்தாப்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சேலம், ஆத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி