எல்லகொண்டா சிவாலயம், தெலுங்கானா
முகவரி
எல்லகொண்டா சிவாலயம், எல்லகொண்டா கிராமம், நவாபேட்டை மண்டலம், விகராபாத் மாவட்டம், தெலுங்கானா – 501203
இறைவன்
இறைவன்: சிவன் இறைவி: பார்வதி
அறிமுகம்
ஹைதராபாத் மாவட்ட தலைமையகத்திலிருந்து சங்கர்பள்ளி சாலை வழியாக சுமார் 57 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது எல்லகொண்டா கிராமம். இந்த பழைய சிவாலயம் விகராபாத் மாவட்டத்தில் நவாபேட்டை மண்டலத்தின் எல்லகொண்ட கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் மூலவர் சிவன் மற்றும் இறைவி பார்வதிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காகத்திய காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. கர்ப்பக்கிரகம், அந்தராலா மற்றும் செவ்வக காக்ஷாசனாவால் சூழப்பட்ட மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மண்டபத்தின் கூரைகள் அஸ்தடிக்பாலகர்களால் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு முன்னால் ஒரு அழகான நாகினி சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிவாலயம் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. கதவுகளில் சிவன் பார்வதியின் நடனம் அழிந்துள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எல்லகொண்டா
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹைதராபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
ஹைதராபாத்