Friday Nov 15, 2024

எட்டுக்குடி முருகன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

எட்டுக்குடி முருகன் கோயில்,

எட்டுக்குடி, திருக்குவளை வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 610204.

இறைவன்:

முருகன்

இறைவி:

வள்ளி, தெய்வானை

அறிமுகம்:

                திருவாரூர் பாங்கல் கொளப்பாடு திருக்குவளை எட்டுக்குடி என வரவேண்டும். அருணகிரிநாதர் இக்கோவில் குறித்து பாடல் இயற்றியுள்ளார் அதனால் இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்தே வழிபாட்டில் உள்ளது எனலாம். பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ‘எட்டுக்குடி’ திருத்தலம். இங்கு முருகன்- வள்ளி, தெய்வானையுடன் முருகன் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார். அவரின் இடப்புறம் இறைவன் சௌந்தரேஸ்வர் முருகனின் வலதுபுறம் தனிகோயில் கொண்டு உள்ளார். அவரின் முன்னர் ஒரு நந்தி உள்ளது. அம்பிகை ஆனந்தவல்லி தென்மேற்கு நோக்கியுள்ளார். அவரின் நேர் எதிரில் ஒரு வன்னி மரத்தடியில் வன்மீகர் சித்தர் ஐக்கியமான இடம் உள்ளது.

இன்றும் அருவுருவாய் நாள்தோறும் முருகப்பெருமானை வணங்குவதாக ஐதீகம். எல்லாத் தலங்களிலும் முருகனின் வலப்புறம் மயிலின் தலைப்பகுதி இருக்கும். இங்கு மட்டும் மயில் இடப்புறமாக தலைப்பகுதி தோன்ற நிற்கின்றது. தேவேந்திரனே இங்கு மயிலாக இருக்கிறார். ஒரு காலை ஊன்றி நிற்கின்ற அழகு மயில் மீது அமர்ந்த நிலையில் அருள்காட்சி தருகிறார். அவரது இடமும்- வலமும் வள்ளி- தெய்வானை தேவியர் புன்னகை சிந்தியபடி, கணவனின் அழகை ரசித்தபடி உள்ளனர். எட்டுக்குடி முருகன், எண்கண் முருகன், பொருள்வைத்தசேரி என்ற சிக்கல் முருகன் ஆகிய மூன்று சிலைகளையும் ஒரே அளவில் ஒரே சிற்பிதான் வடிவமைத்துள்ளார் என்று கூறுகின்றனர்.

இங்கு முருகன் அம்புறாதூளியில் இருந்து அம்பை எடுக்கும் கோலத்தில் உள்ளார். கிழக்கு நோக்கிய கோயில் எதிர்ல் சரவணபொய்கை, இதில் நீராடுதல் அனைத்து பாவங்களையும் தீர்க்க வல்லது. அடுத்து அகன்ற மகாமண்டபம் முருகன் வலது புறத்தில் கருவறையும் சிவன் இடது புறம் கருவறையும் கொண்டுள்ளனர். இறைவன் சௌந்த்ரஸ்வரர் கருவரையின் தென்புறம் தக்ஷணமூர்த்தி உள்ளார். பிரகாரத்தில் வலம் வரும்போது முதலில் வன்னி மரத்தடியில் வன்மீகர் ஜீவசமாதி உள்ளது. அடுத்து தென்மேற்கில் கணபதி, ஜுரதேவர், சீனிவாச சவுந்தராஜப்பெருமாள், ஆஞ்சநேயர், மனோன்மணி , ஐயப்பன், மகாலட்சுமி, நவகிரகங்கள், சனிபகவான், பைரவர் ஆகியோரும் உள்ளனர். பிரகார வடக்கில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற நவ வீரர்களின் திருவுருவமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சூரசம்ஹாரம் செய்ய முருகன் இத்தலத்தில் இருந்தே புறப்பட்டதாக நம்பப்படுகிறது. இதனால் இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் அவரின் கோபத்தை தனிக்கும் வகையில் தினந்தோறும் பாலபிஷேகம் செய்யப்படுகிறது. எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும் கவுரி விரதத்தையும் ஒன்றாகக் கடைப்பிடிப்பது சிறப்பு. தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் இதுதான். இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இப்பூஜையை நடத்துவார்கள். இதற்கு முன்பதிவு செய்யவேண்டும். தற்போது கோயில் கும்பாபிஷேகம் கண்டுள்ளது.  

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

எட்டுக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top