எட்டியலூர் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
எட்டியலூர் காசிவிஸ்வநாதர் கோயில்
எட்டியலூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610104.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன, ஒன்று உமாமகேஸ்வரர் கோயில் மற்றொன்று காசி விஸ்வநாதர் கோயில் கடந்த காலங்களில் இரு கோயில்களும் சிதைந்து கிடந்த நிலையில் ஊரில் மழையின்றி பஞ்சம் நிலவியது. ஊர் தலையாரி கனவில் இறைவன் தோன்றி மூன்று சுமங்கலி பெண்கள் தீர்த்த குளத்தில் இருந்து நீரை கொண்டு வந்து சந்தனம் அரைத்து தடவி வழிபாடு செய்தால் மழை பெய்யும் என கூறவே, மக்கள் அதனை நிறைவேற்றினர். அவ்வருடம் நல்ல மழையும் பொழிந்து ஊர் செழித்தது.
மக்கள் குழு அமைத்து, ஆங்காங்கே கிடந்த சிவாலய மூர்த்திகளை ஒன்று சேர்த்து இரு கோயில்களையும் புனரமைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். இந்த காசி விஸ்வநாதர் கோயிலின் லிங்க பாணம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. காசிக்கு செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர். கிழக்கு நோக்கிய கோயில் இறைவன் காசி விஸ்வநாதர் கிழக்கும், அம்பிகை விசாலாட்சி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர். கோயில் எதிரில் பெரிய குளம் ஒன்றுள்ளது. இறைவன் எதிரில் நந்தி உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன் உள்ளார், சண்டேசர் தனி சன்னதியில் உள்ளார் பிரகாரத்தில் விநாயகர், முருகன்,மகாலட்சுமி மூவருக்கும் தனி சிற்றாலயங்கள் உள்ளன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எட்டியலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி