எட்டியலூர் உமாமகேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
எட்டியலூர் உமாமகேஸ்வரர் திருக்கோயில்
எட்டியலூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610104.
இறைவன்:
உமாமகேஸ்வரர்
இறைவி:
உமாமகேஸ்வரி
அறிமுகம்:
இவ்வூரின் பெயர் காரணத்திற்கு பல தரவுகள் சொல்லப்படுகின்றன. இருந்தபோதிலும் அருகில் ஓடும் வெட்டாற்றில் எட்டி எனப்படும் மரங்கள் வளர்ந்து நிற்பதால் எட்டி ஊர் எட்டியலூர் எனவும் அழைக்கப்படுகிறது என்பதே சரியான தரவாக அமையும். இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன, ஒன்று உமாமகேஸ்வரர் கோயில் மற்றொன்று காசி விஸ்வநாதர் கோயில் கடந்த காலங்களில் இரு கோயில்களும் சிதைந்து கிடந்த நிலையில் பின்னர் எடுத்து கட்டப்பட்டது. இக்கோயில் ஊரின் மையத்தில் உள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன் உமாமகேஸ்வரர், கருவறை வாயிலில் சுதையாலான இரு துவாரபாலகர்கள் உள்ளனர். இறைவி உமாமகேஸ்வரி தெற்கு நோக்கியுள்ளார். இருவரையும் நீண்ட மண்டபம் இணைக்கிறது. அழகாக பீங்கான் ஓடுகள் கொண்டு தளமிடப்பட்டுள்ளது. மண்டபத்தின் வெளியில் நந்தி உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் மற்றும் துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர் மற்றும் பாலமுருகன் இருவருக்கும் சிற்றாலயங்கள் உள்ளன. வடகிழக்கில் நவகிரகமும், பைரவர் சனி இருவரும் ஒரு மாடத்தில் உள்ளனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எட்டியலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி