Monday Jan 27, 2025

ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி

ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில், பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரி, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு 641021 தொலைபேசி: 0422 267 2000

இறைவன்

இறைவன்: ஈச்சனாரி விநாயகர்

அறிமுகம்

ஈச்சனாரி விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரருகே ஈச்சனாரியில் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோயிலின் முதன்மைக் கடவுள் பிள்ளையார் ஆவார். கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் (சாலை எண் 209 – பழைய எண்ணிடல்) கிட்டத்தட்ட 10 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. இந்த கோவில் விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்களை ஈர்க்கிறது, குறிப்பாக விநாயகர் சதுர்த்தியின் போது, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் விழாவாகும். கோவில் திராவிட கட்டிடக்கலைக்கு ஊக்கமளிக்கிறது.

புராண முக்கியத்துவம்

மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டதாகவும், பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டதாம். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம் இவ்வாறு விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது.

நம்பிக்கைகள்

விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் எடுத்த காரியம் தடங்கல் நீங்குகிறதாக இத்தலத்துக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் கூறகிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவதற்காகவும், படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். இவை தவி வியாபார விருத்தி, தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு ஆகியவையும் வேண்டி இத்தலத்து விநாயகப் பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுகிறது.

சிறப்பு அம்சங்கள்

இத்திருக்கோயிலில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர் விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பான ஒன்றாகும். திருக்கோயில் தினப்படி பூஜைக்கு வேண்டிய பால், பன்னீர்னீ, சந்தனம், குங்குமம், மலர் மற்றும் மின் கட்டணம் போன்றவைகளும் கட்டளைதாரர்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது. 5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் அமைந்த அற்புதமான திருத்தலம். கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோயில். நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து போகும் சிறப்புபெற்ற விநாயகர் திருத்தலம்.

திருவிழாக்கள்

விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 2 நாள் திருவிழா, சித்திரைத் திருவிழா 2 நாள் திருவிழா. மாதத்தின் கிருத்திகை, பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் தைப்பூசம், கார்த்திகை தீபம்

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஈச்சனாரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

பொள்ளாச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top