இலந்தவனஞ்சேரி சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
இலந்தவனஞ்சேரி சிவன்கோயில்,
இலந்தவனஞ்சேரி, குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612603.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
குடவாசல் – திருவாரூர் நெடுஞ்சாலையில் 8 கிமீ தூரத்தில் உள்ளது காப்பனாமங்கலம் பேருந்து நிறுத்தம், இந்த நிறுத்தத்தின் நேர் எதிரில் கிழக்கு நோக்கி ஓடும் சோழசூடாமணி ஆற்றினை கடந்து ½ கிமீ தூரம் சென்றால் ஊரின் நடுவில் சிவாலயம் உள்ளது. கோயிலின் வடபுறம் சற்று தூரத்தில் பெரிய குளம் உள்ளது. முற்காலத்தில் பதரிவனம் என அழைக்கப்பட்ட ஊராகும், தற்போது சிறிய கிராம கோயில் போல சிறியதாக காட்சியளிக்கிறது. இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். முகமண்டபத்தில் இறைவனின் எதிரில் நந்தியும் பலிபீடமும் உள்ளது. கருவறை வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர்.
கருவறை கோட்டத்து சுவரில் தென்புறம் சிறிய மாடத்தில் தென்முகன் உள்ளார், வடதிசையில் துர்க்கை உள்ளார். வடகிழக்கில் பலநூறாண்டு பழமையான இலந்தை மரமுள்ளது அதனடியில் பெரிய மகாவிஷ்ணுவின் சிலை உள்ளது, இதனை ஒப்பிட்டு நோக்கும்போது பழங்கோயிலும் அதன் கருவறை கோட்டங்களும் எவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் என ஊகிக்க முடிகிறது. அதனுடன் சில லிங்க பாணங்கள் உள்ளன அவையும் மேற்கில் இருந்திருந்த திருமாளிகை பத்தியில் இருந்த லிங்கங்கள் ஆகலாமென ஊகிக்கமுடிகிறது. வடபுறகோட்டத்தில் லக்ஷ்மிநாராயணர்உள்ளார். பழமையான தலவிருட்சங்களின் கீழ் சித்தர்கள் வசிப்பார்கள் என்பது ஐதீகம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காப்பனாமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி