இலண்டன் சனாதன் மந்திர், இங்கிலாந்து
முகவரி :
சனாதன் இந்து மந்திர்
ஈலீங் சாலை, வெம்ளே HA0 4TA,
இலண்டன், இங்கிலாந்து
இறைவன்:
ராமர், அனுமன், ஷிவ் பரிவார், அம்பா மாதாஜி, ஜலராம் பாபா
அறிமுகம்:
ஸ்ரீ சனாதன் இந்து மந்திர் என்பது லண்டனில் உள்ள இரண்டு இந்து கோவில்களைக் கொண்டு செயல்படுகிறது. லெய்டன்ஸ்டோனில் உள்ள கோவில், ‘நாத்ஜி மந்திர்’ என்று அழைக்கப்படுகிறது. 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில், ராமர், அனுமன், ஷிவ் பரிவார், அம்பா மாதாஜி, ஜலராம் பாபா ஆகியோர் அருள்கின்றனர்.
இதற்குள்ளேயே வெம்பிலி ஆலயம் உள்ளது. 2010-ம் ஆண்டு பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்ட இந்த கோவிலை, கட்டி முடிக்க 14 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த ஆலயம் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய சுண்ணாம்புக் கல்லால் ஆனது. 2.4 ஏக்கரில் அமைந்த பெரிய ஆலயம் இதுவாகும். பல சிற்பங்கள் இந்தியாவிலேயே செய்துகொண்டுவரப்பட்டுள்ளது. மொத்தம் 41 தெய்வ சிற்பங்கள் இந்த ஆலயத்தில் உள்ளது. கோவில் 66 அடி உயரத்தில் உள்ளது. இந்த ஆலயத்தில் அன்னை தெரசா மற்றும் சீக்கிய குருநானக் உட்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்த, நன்கு அறியப்பட்ட மத பிரமுகர்கள் மற்றும் ஆன்மிக பிரமுகர்களின் சிற்பங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன.
காலம்
2010-ம் ஆண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஸ்டான்லி அவென்யூ ஈலிங் ரோடு Stanley Avenue Ealing Road
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆல்பர்டன் Alperton
அருகிலுள்ள விமான நிலையம்
ஹெத்ரோவ் Heathrow Airport