இரும்புதல் திரிலோகநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி
இரும்புதல் திரிலோகநாதசுவாமி திருக்கோயில், இரும்புதல், வழி.சாலியமங்கலம், பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 613504.
இறைவன்
இறைவன்: திரிலோகநாதர் இறைவி: திரிலோகநாயகி
அறிமுகம்
தமிழ் நாடு கும்பகோணம் – பாபநாசம் – திருக்கருகாவூர் – சாலியமங்கலம் பாதையில் திருக்கருகாவூரை அடுத்து 5 கி.மீ-ல் இரும்புதலை (இரும்புத்தலை) என்னும் பெயர்ப் பலகையுள்ளது. பெயர்ப் பலகையுள்ள இவ்விடத்திலிருந்து எளிதில் இத்தலத்தை அடையலாம். மக்கள் வழக்கில் இரும்புதலை என்று வழங்குகிறது. (சிலவிடங்களில் ‘இரும்புத்தலை’ என்றும் எழுதப்பட்டுள்ளது.) இத்தல இறைவன் திரிலோகநாதர் என்றும் இறைவி திரிலோகநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். கோஷ்டத்தில் நாகப்பிரதிஷ்டை, தட்சிணாமூர்த்தி மக விஷ்ணு, துர்க்கை உள்ளனர். இவ்வூர் சிவாலயக் கல்வெட்டில் ‘மனுகுல சூளாமணி மங்கலத்து திருஇரும்புதல் உடைய மகாதேவர்’ என்ற தொடர் உள்ளது. இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
திருவிழாக்கள்
நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகை சோமவராங்கள், சஷ்டி, திருவாதிரை முதலிய விழாக்கள் நடைபெறுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இரும்புதலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி