Wednesday Dec 18, 2024

இந்தலூர் ஸ்ரீ மனபுரீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி

இந்தலூர் ஸ்ரீ மனபுரீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), இந்தலூர், செய்யூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603301.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ மனபுரீஸ்வரர் இறைவி : ஸ்ரீ கைலையார்த கன்னி

அறிமுகம்

காஞ்சி மாவட்டம் செய்யூர் வட்டம் இந்தலூர் கிராமத்தில் 1100 ஆண்டுகள் பழமையான ஆலயம் அமைந்துள்ளது. கொடிமரத்துடன் கூடிய கற்கோயிலில் மூலவராக ஸ்ரீ மனபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அம்பாள் திருநாமம் ஸ்ரீ கைலையார்த கன்னி. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில். தற்போது 5 நிலை ராஜ கோபுரத்துடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள சன்னதிகள் துவார கணபதி, பாலமுருகன், கன்னி மூலை கணபதி, வள்ளிதேவசேனா தேவிகளுடன் முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர், நால்வர் மற்றும் நவக்கிரகம். ஒரு வேளை பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு குப்பா ரெட்டியார்-9444698336, திரு ராமமூர்த்தி-94420 29015, திரு முருகன்-9487231852.

நம்பிக்கைகள்

பரிகார தலம் திருமணம் நடைபெற ஸ்வாமிக்கு இரு மாலைகள் சார்த்தி அதில் ஒன்றை வீட்டிற்கு எடுத்துச்செல்லவேண்டும். திருமணம் ஆனவுடன் தம்பதிகளாக வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இந்தலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மேல்மருவத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top