ஆவணம்பருத்தியூர் கல்யாண வரதராஜப் பெருமாள் கோயில், திருவாரூர்
முகவரி :
ஆவணம்பருத்தியூர் கல்யாண வரதராஜப் பெருமாள் கோயில்,
ஆவணம்பருத்தியூர், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612604.
இறைவன்:
கல்யாண வரதராஜப் பெருமாள்
இறைவி:
மகாலட்சுமி
அறிமுகம்:
நாச்சியார்கோயில் -ஸ்ரீவாஞ்சியம் சாலையில் செருகளத்தூர் தாண்டியதும் குடமுருட்டி ஆற்றை தாண்டி வடக்குநோக்கி சென்றால் பருத்தியூர் அடையலாம். கிழக்கு நோக்கிய சிவன்கோயில். பெரிய குளத்தின் மேற்கு கரையில் உள்ளது சிவாலயம் கிழக்கு நோக்கி உள்ளது. முன்னர் தெற்கு வாயில் மட்டுமே இருந்த நிலையில் கிழக்கில் மூன்று நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு உள்ளது. பள்ளி, சத்துணவு கூடங்கள் கோயில் இடத்தினை ஆக்கிரமித்தது போக தென் வாயில் மட்டும் தெரிகிறது. சூரியன் வழிபாட்டு பேறுகள் பெற்றதால் இவ்வூருக்கு பரிதியூர் என பெயர் பின்னர் பருத்தியூர் ஆனது.
இந்த மாவட்டத்தில் பருத்தியூர் என்ற பெயரில் மூன்று கிராமங்கள் உள்ளன. எனவே, எளிதில் வேறுபடுத்தி அறிய இந்தப் பருத்தியூரை, அருகில் இருக்கும் கிராமத்தின் பெயருடன் சேர்த்து, ‘ஆவணம் பருத்தியூர்’ என்று குறிப்பிடுகின்றனர். வருவாய்துறை வைத்துள்ள பெயர் 31.பருத்தியூர்.
இராம-லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர், அந்த இடமே இன்றைய கோதண்டராமர் கோயிலாக உருவாக்கி உள்ளது. இந்த ராமர் விக்ரகம் அருகில் உள்ள குளத்தினை சீர் செய்யும்போது கிடைத்தவை ஆகும்.
மூலவர்: கல்யாண வரதராஜப் பெருமாள் தாயார் : மகாலட்சுமி
கோதண்டராமர் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் உடன் பெரியதொரு குளத்தின் கரையில் இருந்த இறைவன் சூரியனால் வழிபடப்பெற்றவர், சிறிய குளத்தின் கரையில் இருந்தமற்றொரு சிவன்கோயில் முற்றிலும் சிதைந்து விட்டதால் பெருமாள் கோயில் வளாகத்தை ஒட்டி வைக்கப்பட்டு இருந்ததாக கூறுகின்றனர். பெருமாள் கோயில், ராமர்கோயில் தற்போது முற்றிலும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டபோது கல்யாண வரதராஜப் பெருமாள் சன்னதி முகப்பு மண்டபத்திலேயே ஈசான்ய பகுதியை ஒதுக்கி இந்த சிவலிங்கம் மற்றும் நந்தி விநாயகர் தண்டாயுதபாணி அம்பிகை ஆகிய மூர்த்திகளை வைத்துள்ளனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆவணம்பருத்தியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி