ஆழியூர் கங்காளநாதர் திருக்கோயில், நாகப்பட்டிணம்
முகவரி
ஆழியூர் கங்காளநாதர் திருக்கோயில், ஆழியூர் அஞ்சல், வழி கீவளூர், நாகப்பட்டிணம் மாவட்டம் – 611117.
இறைவன்
இறைவன்: கங்காளநாதர் இறைவி: கற்பகவள்ளி
அறிமுகம்
திருவாரூர் – நாகப்பட்டிணம் பேருந்து சாலையில் கீவளூருக்கும், சிக்கலுக்கும் இடையே ஆழியூர் உள்ளது. பிரதான சாலையில் ஆழியூரை அடைந்து ஊருக்குள் சற்று உள்ளடங்கி உள்ள கோவிலுக்கு வழி விசாரித்துக் கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் திருவாரூரிலிருந்து கீவளூர் (கீழ் வேளூர்) வழியாக நாகப்பட்டடினம் செல்லும் சாலையில் – ‘கீழ்வேளூருக்கும்’ ‘சிக்கலுக்கும்’ இடையில் ஆழியூர் அமைந்துள்ளது. சாலையோரத்தில் உள்ள ஊர். இங்கு ஆழியூர் கங்காளநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் இறைவன் கங்காளநாதசுவாமி என்றும், இறைவி கற்பகவள்ளி என்றும் அழைக்கப்படுகிறார்கள். நான்கு புறமும் மதிற்சுவரும், உயரமான மரக்கதவுடன் கூடிய ஒரு வாயிலுடனும், ஒரு பிராகாரத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தலம் அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
ஸ்ரீ முருகப் பெருமான் தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், “பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம் என்று போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்”‘ என்று கூறி அருளினார். அதன்படி முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த லிங்கங்களில் ஆழியூரிலுள்ள கங்காளதார் ஒருவர் என்று தல வரலாறு கூறுகிறது. கீவளூரில் முருகர் செய்யும் பூஜைக்கு இடையூறு வராமல் காக்க அஞ்சுவட்டத்தம்மன் காவல் இருந்தது பொல ஆழியூரிலும் புருகர் பூஜையைக் காக்க பிடாரி அம்மன் காவல் காத்ததாக சொல்லப்படுகிறது. பிடாரி அம்மனுக்கு இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நேரே விநாயகர், அதையடுத்து பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் இருக்கக் காணலாம். அடுத்துள்ள வாயில் வழியே உள்ளே நுழைந்தால் ஒரு விசாலமான முன் மண்டபம் உள்ளது. நேரே கிழக்கு நோக்கி சதுரபீட ஆவுடையார் மீது லிங்க உருவில் மூலவர் கங்காளநாதர் எழுந்தருளியுள்ளார். முன் மண்டபத்தின் வடபகுதியில் தெற்கு நோக்கிய அம்பாள் கற்பூரவல்லி சந்நிதி உள்ளது. வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தென் மேற்கு மூலையில் பிரளயம் காத்த விநாயகரும், மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், அதையடுத்து கஜலட்சுமியும் கோவில் கொண்டுள்ளனர். கிழக்குப் பிராகாரத்தில் வடகிழக்கில் பைரவர் மற்றும் சூரியன் சிலாஉருவங்கள் உள்ளன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆழியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி