ஆலத்தூர் ஐராவதீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
ஆலத்தூர் ஐராவதீஸ்வரர் சிவன்கோயில்,
ஆலத்தூர், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 606604.
இறைவன்:
ஐராவதீஸ்வரர்
அறிமுகம்:
திருமருகல்- திட்டச்சேரி சாலையில் கட்டுமாவடி ஊரின் வடக்கில் செல்லும் சாலையில் நாலு கிமீ சென்றால் ஆலத்தூர் அடையலாம். ஊரின் வடக்கில் தனித்து உள்ளது சிவன் கோயில் தற்போது திருப்பணிகள் நடக்கிறது. ஐராவதம் வழிபட்ட இறைவன் என்பதால் ஐராவதீஸ்வரர் என பெயர். மேற்கு நோக்கிய இறைவன் இறைவி தெற்கு நோக்கியுள்ளார். பிரதான வாயில் மேற்கில் உள்ளது. கோயிலுக்கு நேர் பின்புறம் பெரிய குளம் நீர் நிரம்பி நிற்கிறது. மேற்கில் இருந்து நீண்டு கிடக்கும் சிமென்ட் பாதை வழி உள் நுழைந்து தென்மேற்கில் உள்ள விநாயகரை வணங்கிவிட்டு பின்னர் இறைவனை வணங்கிட செல்கிறோம், விநாயகர் பெயர் சித்தி விநாயகர் தற்போது வண்ணபூச்சு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இறைவன் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தி, இறைவி பெயர் தெரியவில்லை. இறைவன் எதிரில் நந்தி மேடை உள்ளது திருப்பணி என்பதால் மூர்த்திகள் தனியாக வைக்கப்பட்டு உள்ளன. வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானை சகிதமாக சன்னதி கொண்டுள்ளார். வழமை போல் சண்டேசர் இறைவனின் கோமுகத்தருகில் உள்ளார். கோட்டங்கள் அனைத்தும் காலியாக உள்ளன. விரைவில் பணிகள் முடிந்து அழகிய கோயில் கொண்ட இறைவனை காண வருவோம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆலத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி