ஆலங்குடிசேரி திருநீலநக்கநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/306491048_8016095975130109_3998332083791959230_n.jpg)
முகவரி :
ஆலங்குடிசேரி திருநீலநக்கநாதர் சிவன்கோயில்,
ஆலங்குடிசேரி, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609703.
இறைவன்:
திருநீலநக்கநாதர்
அறிமுகம்:
சன்னாநல்லுரில் இருந்து திருமலைராயன் பட்டினம் சாலையில் 17வது கிமீ-ல் திட்டச்சேரி உள்ளது அடுத்து 18வது கிமீ-ல் ப.கொந்தகை உள்ளது. இங்கிருந்து தெற்கில் ஒரு கிமீ சென்றால் ஆலங்குடிசேரி கிராமம். ஆலங்குடி புதுச்சேரி என்பதே ஆலங்குடிசேரி ஆனது இங்கு ஒருகாலத்தில் இருந்த சிவாலயம் முற்றிலும் தடயமின்றி காணமல் போக இருந்த ஒரு பெரிய லிங்கம் மட்டும் சில நல்லோரால் தகரகொட்டகையும் மேடையும் கொண்டு நிற்கிறது. அதிலும் ஒரு நல்லோர் ஒருவர் தனக்கு தெரிந்த தேவாரங்களை பாடிக்கொண்டு நித்திய பூஜை செய்து கொண்டு உள்ளார்.
அந்த சிவனடியார் இளைஞர் தான் கையுடனேயே கொண்டு வந்த பூக்களையும் நிவேதனத்தையும் வைத்துவிட்டு தேவாரம் பாடியபடி லிங்கம் முழுமையும் எண்ணை சாற்றி விட்டு மஞ்சள் மற்றும் பாலபிஷேகம் செய்துவிட்டு ஒரு இடம்விடாமல் நீர் திவலைகளை துடைத்து எடுத்துவிட்டு முழுமையாக வஸ்திரம் சாற்றி அபிமுகமான எதிர்புரத்திற்க்கும் சந்தனம் விபூதி கொண்டு அலங்காரம் செய்து விட்டு பூமாலைகள் பூக்கள் கொண்டு அலங்காரம் செய்கிறார். இக்கோயிலின் இறைவன் திருநீலநக்கநாதர் ஏன் இந்த பெயர் என அறியமுடியவில்லை.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/306084041_8016095978463442_4448958036716202033_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/306491048_8016095975130109_3998332083791959230_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆலங்குடிசேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி