Friday Oct 04, 2024

ஆத்தூர் தலையாட்டி விநாயகர் திருக்கோயில், சேலம்

முகவரி

அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில், ஆத்தூர், சேலம் மாவட்டம் – 636108. போன்: +914282 320 607

இறைவன்

இறைவன்: தலையாட்டி விநாயகர்(காவல் கணபதி)

அறிமுகம்

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நகரின் மையப்பகுதியில் தலையாட்டி விநாயகர் கோயில் உள்ளது. முற்காலத்தில் இப்பகுதியில் வசிட்டநதி, சுவேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் “ஆற்றூர்‘ என்றழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் “ஆத்தூர்” என்று மருவியுள்ளது. இவரது கோயிலுக்கு அருகில் சிவன், காயநிர்மாலேசுவரராக அருளுகிறார்.

புராண முக்கியத்துவம்

சிவதல யாத்திரை சென்ற வசிட்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை நிறுவனம் செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் நிறுவிய லிங்கத்தில் ஒளிப்பிழம்பு வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது. பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டி முதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்தச் செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான். எந்த ஒரு காரியத்தையும் விநாயகரை வழிபட்ட பின்பே தொடங்குவது மரபு. சிவன் கோவில் கட்டுவதற்காக, இங்கு கோவில் கொண்டிருக்கும் விநாயகரிடம் சிற்றரசர் அனுமதி கேட்ட போது, விநாயகர் அனுமதியளித்ததுடன், அவரை அக்கோவில் கட்டுமானத்தில் மேற்பார்வையாளராக இருந்து கோவில் சிறப்பாக கட்டி முடிக்கப்படுவதை உறுதி செய்தார். கோவில் சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்ட பிறகு தான் கோவிலை சரியாக கட்டடியிருக்கிறேனா என விநாயகப்பெருமானிடம் கெட்டி முதலி கேட்ட போது விநாயகர் தனது தலையை அசைத்து ஆம் என ஆமோதித்ததாக கூறுகிறது வரலாறு. எனவே இவருக்குத் “தலையாட்டிப் பிள்ளையார்” என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்.

நம்பிக்கைகள்

புதிய செயல்களை தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பது நம்பிக்கை. திருமண, புத்திர, கிரக தோடம் நீங்க இங்கு வழிபடலாம்.

திருவிழாக்கள்

விநாயகர் சதுர்த்தி.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஆத்தூர், சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top