அஷ்டமி அன்று செய்ய கூடாதவை;கூடியவை
ஜோதிடத்தின் படி அஷ்டமி திதியானது ஒரு முக்கியமான திதியாகும் அஷ்டமியில் தொட்டது எதுவும் துலங்காது என்று கூறும் வழக்கமானது காணப்படுகின்றது ஆனாலும் இந்த திதி இறைவழிபாடுகளுக்கும் தெய்வீக காரியங்களை ஆற்றவும் மிகுவும் பொருத்தமானதாகும். ஏனெனில் கிருஷ்ணன் பிறந்தது இந்த திதியில் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். இந்த தினத்தில் சில விஷயங்களை நாம் தவிரத்து கொள்வது நல்லதாகும்.
அஷ்டமி அன்று செய்ய கூடாதவை
இந்த தினத்தில் ஆரம்பிக்கின்ற வேலைகள் முழுமை அடையாது என்பது இந்து மதத்தில் ஐதீகமாக இருக்கின்றது.
இந்த நாளில் குடும்பம் சார்ந்த சுப நிகழ்வுகள் அதாவது திருமணம், கிரக பிரவேசம், நிச்சயதார்த்தம், தொழில் ஆரம்பம் போன்ற மனித வாழ்வியலோடு தொடர்புடைய காரியங்களை ஆற்றுவது கூடாது என்று கூறப்படுகின்றது. ஒரு மாதத்தில் வருகின்ற இரண்டு அஷ்டமி திதிகளை சுபவிலக்கு திதிகளாக எமது முன்னோர் கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
எது எவ்வாறாக இருந்தாலும் அஷ்டமி தினங்களில் இறைவழிபாடுகளை ஆற்றுவதற்கு மிகவும் பொருத்தமான நாளாக இது பார்க்கப்படுகின்றது. அஷ்டமியில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
காரியங்களை இந்த திதியில் ஆரம்பிப்பதனால் அந்த காரியம் முழுமையடையாது நீண்டு செல்லும் என்பது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. இதனால் தான் இந்த காலத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
பொதுவாக இந்த திதியானது அநீதிக்கு எதிராக இறைவன் அழித்தல் தொழிலை புரிவதற்காக தேர்தெடுத்த திதியாகும். இதனால் தான் கம்சன் எனும் அரக்கனை அழிக்க பகவான் கிருஷ்ணர் அஷ்டமியில் பிறந்தார் என்பது வரலாறு.
அஷ்டமியில் என்ன செய்யலாம்
ஒரு மாதத்தல் வரக்கூடிய இரண்டு நாட்களான அஷ்டமியில் இறை வழிபாடுகளை ஆற்றுவது சால சிறந்த விஷயமாகும். சிறப்பாக காலபைரவரை வணங்குவது பல வழிகளிலும் நமக்கு நன்மை தரும் என்று கூறுகின்றார்கள்.
எவ்வகையான தடைகள் கஷ்டங்கள் வாழ்வில் இருந்தாலும் இறைவழிபாடு அனைத்தையும் மாற்றியமைக்க கூடியது. தமது சொந்த காரியங்கைள சற்று விலக்கி வைத்துவிட்டு இறைவழிபாடு மற்றும் ஆன்மீக வழிகளில் நேரத்தை கழிப்பது மிகவும் பலனுடையதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
அஷ்டமி திதிக்கு மூல முதலாக விளங்கும் உருத்திர மூர்த்தியினை வணங்குவது இந்த திதியின் உச்ச பலனை தர வல்லது. இதனால் தான் பக்தர்கள் இக்காலத்தில் சிவ வழிபாட்டில் ஈடுபடுவதனை அவதானிக்க முடிகின்றது. இறைவழிபாட்டின் மூலம் அந்த நாளை நல்ல நாளாக எம்மால் மாற்றிவிட முடியும்.
மேலும் இந்த தினங்களில் மனதை அமைதிப்படுத்தவும் ஆன்மாவை வலிமையடைய செய்யக்கூடிய தியானம் போன்ற வழிபாடுகளை ஆற்றுவது பொருத்தமானதாக அமையும்.
அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணர் அவதாரம் செய்தமையால் உண்மையில் இந்த திதி புனிதமானது அதன் மகிமையினை உணர்ந்து இந்த காலங்களில் நல்ல வழிபாடுகளை ஆற்றுவது நன்மை தரும்