Thursday Dec 26, 2024

அழிசூர் அருளாலீஸ்வரர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அழிசூர் அருளாலீஸ்வரர் சிவன் கோயில், அழிசூர், உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 402

இறைவன்

இறைவன்: அருளாலீஸ்வரர் இறைவி : அம்புஜ குசலாம்பாள்

அறிமுகம்

காஞ்சி மாவட்டம் உத்திரமேருரிலிருந்து ஒன்பது கி மி தொலைவில் அமைந்துள்ளது அழிசூர் கிராமம். இங்கு கி. பி 1122 ம் ஆண்டு விக்கிரம சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ அருளாலீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. செய்யாறு நதியின் தென்கரையில் அமைந்துள்ள இந்த சிவாலயம் முன்னொரு காலத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெற்று சிறப்புற விளங்கியது என்பது இங்குள்ள கல்வெட்டுகளிருந்து தெரிகிறது. தொடர்ந்து வந்த படையெடுப்பாலும் பராமரிபின்மையாலும் கால ஓட்டத்தில் இன்று மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இங்குள்ள ஸ்ரீ அருளாலீஸ்வரர் ஸ்ரீ அகஸ்திய முனிவரால் வழிபடப்பட்டவர். அம்பிகையின் பெயர் ஸ்ரீ அம்புஜ குசலாம்பாள். இக்கோயிலுக்கு மதில் சுவர்கள் இல்லை. இதற்கு மாற்றாக கற்பலகைகளால் ஆன சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு முன் எல்லைக்கு வெளியே விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் கொடிமரம் கல் தூணில் எழுப்பப்பட்டுள்ளது. இறைவன் அருளாலீஸ்வரர் அழிஞ்சில் மரத்தால் ஆனதாக கூறுகிறார்கள்.

புராண முக்கியத்துவம்

இக்கோயில் தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. சுவாமி விமானம் சில மாதங்களுக்குமுன் இடிந்து விழுந்துவிட்டது. கற்குவியலுக்கு இடையில் லிங்கத்தின் மேல் பகுதி மட்டும் தெரிகிறது. கோயிலில் எங்கு நோக்கினாலும் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இந்த ஆலயத்தின் நந்தியம்பெருமானை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். காளை ஒன்று . வயலில் மேய்ந்துவிட்டு மர நிழலில் படுத்து ஏகாந்தமாக அசை போட்டுக்கொண்டிருக்கும் காட்சி எப்படி இருக்குமோ அதே கலை அம்சத்துடன் சிற்பி இந்த நந்தியை வடிவமைத்துள்ளான். இந்த நந்தியம்பெருமானை வில்வம், அருகம்புல், வெல்லம், ஏலம் கலந்த பச்சரிசி கொண்டு வழிபட்டால் வேண்டும் வரம் கிட்டுமாம். பிரதோஷ காலத்தில் வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்குவதோடு நோயற்ற வாழ்வு கிட்டும் என்று கூறுகிறார்கள். கோயிலின் தென்புற நுழைவாயிலில் மங்கள விநாயகர் காட்சி தருகிறார். உட்புறம் சென்றால் கருவறை இடிந்த நிலையில் காணப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கயுள்ள ஈசனைக்காணும்போது நம் கண்கள் பனிக்கின்றன. அன்னை அம்புஜ குசலாம்பாள் அபய ஹஸ்தத்துடன் புன்னகை செய்கிறாள். முருகன், பைரவர் சன்னதிகளும் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சிலைகளே இல்லாத இரு சன்னதிகள் காணப்படுகின்றன. அங்கு எந்த மூர்த்தங்கள் இருந்தன என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம். எங்குமில்லாத சிறப்பாக ஸ்ரீ அருளாலீஸ்வரர் கருவறை அருகே ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப்பெருமாள் காட்சி தருவது வியப்பை அளிக்கிறது. மீண்டும் புதிய ஆலயத்தை நிர்மாணிக்கும் முயற்சி நடந்து வருகிறது. ஆன்மீக அன்பர்கள் ஒத்துழைப்பும் உதவியும் கிட்டினால் ஈசன் துணையுடன் இங்கு அழகு மிளிரும் புதிய ஆலயம் உருப்பெறும் என உறுதியாக நம்பலாம். இப்பணிக்கு உடலாலும் பொருளாலும் உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அலைபேசி 9976629446 ,9626190788 ,9382630359

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அழிசூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

உத்திரமேரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top