Wednesday Dec 25, 2024

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில் நத்தம் திருவரகுணமங்கை

முகவரி

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில் நத்தம் திருவரகுணமங்கை, தூத்துக்குடி மாவட்டம் – 628 601

இறைவன்

இறைவன்: விஜயாசனப்பெருமாள் இறைவி: வரகுண மங்கை தையர்

அறிமுகம்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதி யில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல் படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நதி அமைக்கப்படுவதில்லை.அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அதைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம். நத்தம் என்று சொன்னால்தான் பலருக்கும் புரியும். அருகில் வீடுவீ கள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்த்தனை ப்படி பகவான் காட்சி கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம். தீர்த்தம் – அக்னி தீர்த்தம், ‌தேவபுஷ்கரணி

புராண முக்கியத்துவம்

நத்தம் என்று சொன்னால்தான் பலருக்கும் புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்த்தனைப்படி விஜயசனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம்பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கலாம். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி 1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம் 2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்) 3. செவ்வாய் : திருக்கோளுர் 4. புதன் : திருப்புளியங்குடி 5. குரு : ஆழ்வார்திருநகரி 6. சுக்ரன் : தென்திருப்பேரை 7. சனி : பெருங்குளம் 8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்கலம்) 9. கேது : 2 . இரட்டைத் திருப்பதி இங்கு பெருமாள் சந்திர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top