அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், இறையான்சேரி – இரவாஞ்சேரி
முகவரி
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், இரவாஞ்சேரி – அஞ்சல் – 611 105, கூத்தூர் (வழி0, நீலப்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்
இறைவன்
இறைவன்:விசுவநாதர், இறைவி : விசாலாட்சி
அறிமுகம்
சோழநாட்டு வைப்புத்தலம். இரவாஞ்சேரி என்று வழங்குகிறது. இறையான்சேரி என்பது இதன் பெயர், மக்கள் வழக்கில் இன்று இரவாஞ்சேரி என்று வழங்குகிறது. திருவாரூர் – நாகை சாலையில் நீலப்பாடியில் இருந்து வடக்கில் மூன்று கிமீ தூரத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக சிதைவடைந்த நிலையில் இருந்த அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீவிஸ்வநாதர் திருக்கோயில் திருப்பணிகள் இறைவன் திருவருளால் துவங்கப்பெற்று தற்போது குடமுழுக்கு கண்டுள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில் முகப்பு ரிஷபாரூட காட்சி கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். நீண்ட முகப்புமண்டபம் உள்ளது அதற்கு வெளியில் நந்தி மண்டபம் உள்ளது. பிரகாரத்தில் விநாயகரும் முருகனும் தனி சிற்றாலயம் கொண்டுள்ளனர். சண்டேசர் வடபுறம் உள்ளார். வடகிழக்கில் பைரவர் உள்ளார். கோஷ்ட மூர்த்திகள் ஏதுமில்லை. கோயில் அழகாக சுற்றுசுவரும் கொண்டுள்ளது. கோயிலின் பின்புறம் பெரிய குளம் ஒன்றுள்ளது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்பு தலமாகும்.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கூத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி