அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்- கேட்டை நட்சத்திரம்
முகவரி
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பசுபதி கோயில், அய்யம்பேட்டை, பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். Phone: +91 97903 42581, 94436 50920
இறைவன்
இறைவன் – வரதராஜப்பெருமாள் இறைவி – பெருந்தேவி
அறிமுகம்
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாளில் நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ அடிக்கடி சென்று வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் வரதராஜப்பெருமாள். இங்கு வரதராஜப்பெருமாளும், தாயார் பெருந்தேவியாரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். கேட்டை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கல்வியில் தேர்ச்சி பெற்று திகழ்வர். தைரியமும் துணிச்சலும் இயல்பாக இருக்கும். குறும்புத்தனமும், நகைச்ச்சுவையும் கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும் பேசுவதில் வல்லவர்கள். முன் நின்று எந்தச் செயலையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் உண்டு. முன்கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டார்கள்.
புராண முக்கியத்துவம்
வைணவ ஆச்சாரியாரான ராமானுஜர், இவரது குரு பெரிய நம்பிகள், ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வார் இம்மூவரும் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். ராமானுஜரின் புகழைப் பிடிக்காத சோழ மன்னர் ஒருவர், அவரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். வரும் படையினருக்கு ராமானுஜரைத் தெரியாது. எனவே, கூரத்தாழ்வார், ,ராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து, ,. சோழ படையினரிடம் தானே ராமானுஜர் என்று சொல்லி, அவர்களுடன் சென்றார். அப்போது, பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் உடன் சென்றனர். சோழ மன்னன் பெரியநம்பி, கூரத்தாழ்வாரிடம் சைவ மதம் உயர்ந்தது என எழுதித்தரும்படி சொன்னான். அவர்கள் மறுக்கவே இருவரின் கண்களையும் பறிக்கும்படி கூறினான். உடனே கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்தி பார்வை இழந்தார். சோழ படையினர் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். பின், இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்து வந்து, இத்தலத்தில் தங்கினாள். இவ்வேளையில் பெரிய நம்பிகளுக்கு வயது 105. தள்ளாத வயதில் கண்களை இழந்து துன்பப்பட்டார். அப்போது அவருக்கு காட்சி தந்த வரதராஜப்பெருமாள், அவர் தங்கியிருந்த இத்தலத்திலேயே மோட்சம் கொடுத்தார்.
நம்பிக்கைகள்
கேட்டை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
இங்கு வரதராஜப்பெருமாளும், தாயார் பெருந்தேவியாரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். ராமானுஜரின் குரு பெரிய நம்பிகளுக்கு பெருமாள் இத்தலத்தில் காட்சி தந்ததுடன், மோட்சமும் கொடுத்தது சிறப்பாகும். பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும். மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு விசேஷ பூஜை உண்டு. கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கான விசேஷ வழிபாட்டுத் தலம் இது. இந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷம், குரு, சனி, ராகு கேது பெயர்ச்சியால் தோஷங்கள் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை போன்ற பதார்த்தங்கள் வைத்து, நெய் தீபம் ஏற்றுகின்றனர். மேலும், மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்க்கப்பட்ட எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது இன்னும் விசேஷ பலன் தரும். கேட்டை நட்சத்திரத்துடன் வரும் செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வழிபடவது சிறப்பு
திருவிழாக்கள்
மார்கழி கேட்டை, புரட்டாசி சனிக்கிழமைகள்
காலம்
1000-2000 வருடங்களுக்கு முன்
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி