அருள்மிகு மந்தாரவனேஸ்வரர் திருக்கோயில், ஆத்தூர்
முகவரி
அருள்மிகு மந்தாரவனேஸ்வரர் திருக்கோயில், ஆத்தூர் – அஞ்சல் – 609204, திருமேனியார் கோயில் (வழி), நாகப்பட்டினம் மாவட்டம் PH:04374-265130
இறைவன்
இறைவன்: மந்தாரவனேஸ்வரர், சொர்ணபுரீசுவரர், இறைவி: அஞ்சனாட்சி, அங்கயற்கண்ணி
அறிமுகம்
வைத்தீஸ்வரன் கோயில் – திருப்பனந்தாள் சாலையில் மணல்மேடு வந்து பந்த நல்லூர் சாலையில் திரும்பி சென்று – ‘கேசிங்கன்’ என்னும் ஊரையடைந்து – மெயின் ரோடில் விசாரித்து – வலப்புறச் சாலையில் திரும்பிச் சென்றால் ஆத்தூர் வரும். ஊர்க்கோடியில் நாம் வலப்புறப் பாதையில் திரும்பிச் சிறிது தூரம் சென்றால் கோயிலை காணலாம். ஊரின் பெயர், இறைவனின் பெயர்களை நோக்குங்கால், முன்பொரு காலத்தில் இவ்வூர் மந்தார வனமாக இருந்தமை புலனாகிறது. மந்தார வனம் என்ற பெயர் மந்தாரம் ஆயிற்று மக்கள் வழக்கில் ஆத்தூர் என்று வழங்குகிறது.. இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுவர், மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவார். பழமையான கோயில். கருவறை கல் கட்டிடமாகவும், கோயில் செங்கல் கட்டிடமாகவும் காணப்படுகிறது. போதிய பராமரிப்பு இல்லை. அனைத்தும் சிதிலமாகியுள்ளது. கோயிலின் எதிரே உள்ள மண்டூக தீர்த்தம் வறண்டு சீர்கெட்டுள்ளது. அதேபோல் தலமரமான மந்தாரையும் தற்போதில்லை. பட்டுப்போய்விட்டது. சிறப்பு வழிபாடுகள் ஏதுமின்றி காணப்படுகிறது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
சிறப்பு அம்சங்கள்
நந்தி பூஜித்த தலம் மற்றும் தவளை முத்தி பெற்ற தலமும் ஆகும். இச்சிற்பங்கள் கோயிலின் மதிற்சுவரில் உள்ளது. இத்தலத்தில் சோழர்கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
திருவிழாக்கள்
செவ்வாய் மற்றும் வெள்ளி நாட்களில் துர்க்கை வழிபாடு, பிரதோஷம், கார்த்திகை சோம வாரங்கள் ஆகியவை மட்டும் நடைபெறுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வைத்தீஸ்வரன்கோயில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
வைத்தீஸ்வரன்கோயில்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி