அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், ஆனைமாகாளம்
முகவரி
அருள்மிகு மகாகாளேஸ்வரர் கோயில், ஆனைமாகாளம், ஓக்கூர் – அஞ்சல் – 611104 நாகப்பட்டினம்.
இறைவன்
இறைவன்: மகா காளேஸ்வரர், இறைவி: மங்கள நாயகி
அறிமுகம்
கீழ்வேளூர் (கீவளூர்) வந்து மெயின்ரோடில் விசாரித்து இடப்புறமாகப் பிரியும் ‘வடகரை’ சாலையில் சிறிது தூரம் சென்றால் (இப்பாதையில் வளைவுகள் அதிகம்) ‘நாங்குடி’யும், அடுத்து ‘ஆனை மங்கலமும்’ வரும். ஊர்க்கோடியில் வண்டியை நிறுத்திவிட்டு, ஒற்றைப் பாதை வழியே நடந்து சென்று, ‘வெட்டாற்றை’க் கடந்தால் மறுகரையில் கோயில் உள்ளது. செங்கல் கட்டிடம் – முழுவதும் சிதலமாகியுள்ளது. செடிகள் முளைத்துள்ளன. சிவலிங்க மூர்த்தம் மட்டுமே உள்ளது. வேறெதுவுமில்லை. அம்பாள் சன்னதி பக்கத்தில் கோயில் கோபுரம் முன்புறம் இடிந்து விழுந்துள்ளது. வாயிற் கதவு ஏதுமில்லை – திறந்த வெளிதான். திருப்பணி செய்து காப்பாற்றப்படவில்லையெனில் அடுத்த தலைமுறைக்குக் கோயில் இருக்காது. மக்கள் வருவதாகவோ, வழிபாடுகள் நடப்பதாகவோ எவ்வித அறிகுறியுமில்லை. செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் குருக்கள் வந்து பூஜை செய்து விட்டுப் போவதாக சொல்கிறார்கள். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்பு தலமாகும்.
புராண முக்கியத்துவம்
சிவபெருமானைப் பூஜிக்க முருகப் பெருமான் கீழ் வேளூரில் எழுந்தருளியபோது, காவலின் பொருட்டு யானை மீது ஏறி வந்த மகாகாளியால் பூஜிக்கப்பட்ட தலம். லிங்கத்திருமேனி மட்டுமே உள்ளது. சிறிய கோயிலாக இடிபாடுற்ற நிலையில் உள்ளது. கோயிலைச் சுற்றிப் பத்து வீடுகளே உள்ளன. மிகச் சிறிய கிராமம்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி