அருள்மிகு பாபனிபூர் சக்திபீடம் திருக்கோயில், வங்காளதேசம்
முகவரி
அருள்மிகு பாபனிபூர் சக்திபீடம் திருக்கோயில், பவானிபூர் சாலை, போக்ரா பவானிபூர் மாவட்டம், வங்காளதேசம்
இறைவன்
சக்தி: அபர்ணா தேவி பைரவர்: வாமண், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது கணுக்கால்
அறிமுகம்
ஷெர்பூர் நகரிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் வங்களாதேசத்தின் ராஜ்ஷாஹி பிரிவில் உள்ள போக்ராவில் பபனிபூர் சக்திபீடம் அமைந்துள்ளது. இந்து யாத்ரீகர்களுக்கு ஒரு முக்கியமான தளமாக இருந்து வருகிறது. கோயில் வளாகம் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது பிரதான கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நான்கு கோயில்கள் மற்றும் படல் பைரவ் கோயில் வாமனனுக்கு அர்ப்பணிக்கப்படுள்ளது.
புராண முக்கியத்துவம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் இடது கணுக்கால் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஷெர்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
போக்ரா
அருகிலுள்ள விமான நிலையம்
தகா