Wednesday Dec 25, 2024

அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் – ரோகிணி நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு பாண்டவதூதர் திருக்கோயில் – திருப்பாடகம் (காஞ்சிபுரம்) பெரியகாஞ்சிபுரம் – 631 502., ஸ்ரீனிவாசன் : 044-27231899.

இறைவன்

இறைவன்: பாண்டவதூதர் இறைவி:சத்யபாமா, ருக்மிணி

அறிமுகம்

பாரத கதையை வைசம்பாயண மகரிஷி ஜனமேஜய மகாராஜனுக்கு சொன்னார் என்பது அனைவரும் அறிந்ததே. அக்கதையில் பாண்டவர்களின் வனவாசகால ம்முடிந்ததும் அவர்களுக்காக பாதி இராஜ்ஜியம் கேட்டு துரியோதனனிடம் கிருஷ்ணபகவான் தூது சென்றபோது அவரையே தீர்த்துக்கட்ட சூழ்ச்சி செய்த துரியோதனனுக்கு தனது விஸ்வரூபத்தை கிருஷ்ணர் காட்டின விபரத்தை வைசம்பாயனர் சொன்னதைக் கேட்ட ஜனமேஜயர் அந்த பாண்டவதூதர் தரிசனம் பெற விருப்பம் கொண்டவராய் காஞ்சிபுரத்தில் அஸ்வமேதயாகம் ஒன்று நடத்தினாராம். பூர்ணாகுதி ஆனதும் கிருஷ்ண பரமாத்மா தனது பாண்டவ தூதவேடத்தில் வெளிப்பட்டு காட்சி தந்ததாக ஐதீகம்

புராண முக்கியத்துவம்

கிழக்கு பார்த்த கோபுரத்துடன் விளங்கும் இத்திருத்தலத்தில் மூலவர் பாண்டவதூதர் 25 அடி உயரத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சிதருகிறார். சுதையாலான திருமேனி. இங்கு ருக்மணி அம்மையாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் தனி சந்நிதிகள் உண்டு. வைணவ சம்பிரதாயத்தில் சில முக்கியமான கிரந்தங்கள் இயற்றியுள்ள அருளாளப் பெருமானுக்கும் சந்நிதி இருக்கிறது. ரோகிணி நட்சத் திரக்காரர்களின் பொது குணம்: ரோகிணி நட்சத் திரக்காரர்களின் பொது குணம் கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்பு பவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள் செல்வாக்கு சிறப்பாக இருக்கும்.

நம்பிக்கைகள்

ரோகிணிதேவி, இத்தலத்து பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில் ஞானசக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவிகளை மணந்தார். ரோகிணி தனக்கு ஞானசக்திகளையும், விஸ்வரூப தரிசனத்தையும் கொடுத்த பெருமாளை, இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வணங்க வருவதாக ஐதீகம். எனவே, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன், சனிக்கிழமை, அஷ்டமி திதி, 8ம் தேதிகளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க, இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகி விடும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

உற்சவங்கள் : இங்கு கோகுலாஷ்டமி, தீபாவளி, முக்கோடி ஏகாதசி பிரபலமானவை.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்பாடகம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top