அருள்மிகு நாகர்கோட் வஜ்ரேஸ்வரி க்திப்பீடத் திருக்கோயில், இமாசலப்பிரதேசம்
முகவரி
அருள்மிகு நாகர்கோட் வஜ்ரேஸ்வரி திருக்கோயில் மந்திர் சாலை, காங்ரா, இமாசலப் பிரதேசம் 176001.
இறைவன்
சக்தி: வஜ்ரேஸ்வரி பைரவர்: அபிரு, உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடதுமார்பகம்
அறிமுகம்
நாகர்கோட் வஜ்ரேஸ்வரி கோயில் இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் வஜ்ரேஸ்வரியும் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கே குடி கொண்டிருக்கும் தேவியின் பெயர் வஜ்ரேஸ்வரி தேவி. ஜம்மு வைஷ்ணவதேவி கோவில் போலவே இங்கேயும் தேவியை பிண்டி ரூபத்தில் வழிபடுகிறார்கள். காங்க்டா தேவி என்று சொல்லப்படும் வஜ்ரேஷ்வரி தேவி கோவிலுக்கு நாகர்கோட் தாம் என்றும் கோட் காங்க்டா என்றும் பெயர்கள் உண்டு. சதி தேவியின் இடது மார்பகம் இந்த இடத்தில் தான் விழுந்தது என்று சொல்வது போலவே வேறு சில வரலாறுகளும் உண்டு. மகிசாசுரனை வதைத்த போது வஜ்ரேஷ்வரி தேவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அப்புண்களை குணப்படுத்த அதன் மேலே வெண்ணை தடவிக் கொண்டதாகவும் கூறப்படுகிறார்கள். இப்போழுதும் மகர சங்கராந்தி தினத்தன்று வஜ்ரேஷ்வரி தேவிக்கு வெண்ணைக் காப்பு செய்கிறார்கள்.
புராண முக்கியத்துவம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் இடதுமார்பகம் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
நம்பிக்கைகள்
ஜனவரி இரண்டாவது வாரத்தில் வரும் மகர சங்கராந்தி கோயிலில் கொண்டாடப்படுகிறது. போரில் மகிசாசுரனைக் கொன்ற பிறகு, தேவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அப்புண்களை குணப்படுத்த அதன் மேலே வெண்ணை தடவிக் கொண்டதாகவும் கூறப்படுகிறார்கள். இப்போழுதும் மகர சங்கராந்தி தினத்தன்று வஜ்ரேஷ்வரி தேவிக்கு வெண்ணைக் காப்பு செய்கிறார்கள். கோவிலில் ஒரு வாரம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காங்ரா
அருகிலுள்ள இரயில் நிலையம்
பதான்கோட்
அருகிலுள்ள விமான நிலையம்
ககல்