அருள்மிகு நாகபூசணி அம்மன் சக்தி பீடக் கோவில், இலங்கை
முகவரி
அருள்மிகு நாகபூசணி அம்மன் திருக்கோயில் நயினாதீவு, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
இறைவன்
சக்தி: இந்த்ராக்ஷி / நாகபூஷணி அம்மன் பைரவர்: ராக்ஷஷேஸ்வர, உடல் பகுதி அல்லது ஆபரணம்: காற்சிலம்புகள்
அறிமுகம்
நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற கோயில் ஆகும். மேலும் இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காற்சிலம்பு விழுந்த பீடமாக கருதப்படுகிறது. இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்புருவங்களாகவே உள்ளன.
புராண முக்கியத்துவம்
வரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க இவ்வாலயம் அந்நியர் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பின்னர் இவ்வாலயம் இராமலிங்கம் இராமச்சந்திரர் என்பவரால் 1788 இல் கல்லுக்கட்டிடமாகக் கட்டப் பெற்றது. 1935 ஆம் ஆண்டு கிழக்கு வாயில் இராஜகோபுரம் கட்டப்பட்டது. இவ்வாலயத்தின் விமானம் 1951 ஆம் ஆண்டு அழகாக அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நுழைவாயில் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய 108 அடி உயரமான நவதள நவகலச இராச கோபுரத்திற்கு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் பூரணைதோறும் இடம் பெறும் ஸ்ரீசக்ரபூஜையும் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு என்பவற்றிற்காகச் செய்யப்படும் நாகசாந்தியும் நாகப் பிரதிஷ்டையும் முக்கியமானவையாக விளங்குகின்றன. இவ்வாலயத்தில் நித்திய அன்னதானம் நடைபெறுகின்றது.
சிறப்பு அம்சங்கள்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் காற்சிலம்புகள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
திருவிழாக்கள்
சித்திரத்தேரில் பவனி வரும் ரதோற்பவமும் 5ம்திருவிழாவாக குடைத்திருவிழாவும்,7ம் திருவிழா அன்று வாயுபட்சணி என்ற சர்ப்பத்தில் வீதியுலாக்காட்சியும்,10ம்,13ம் திருவிழா கையிலைக்காட்சியும் 10ம்திருவிழா இரவு திருமஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலாவும்,11ம்திருவிழா காலை ஆலயவரலாறுடன் தொடர்புடைய கருட/சர்ப்பபூசையும் அன்று இரவு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய பூந்தண்டிகையில் வீதியுலாவும்,13ம்திருவிழா இரவு சப்பரத்திருவிழாவும், 15ம்திருவிழாவாக அம்பாள் ஊர்மனையூடாக வெளியே காவிச்சென்று ஊரின் மேற்குப் பக்கமாக இருக்கும் கங்காதரணி தீர்தக்கேணியில் தீர்த்தமாடல் விழாவும்,16ம்நாள்விழாவாக அம்பாள் அழகிய மின்குமிழிகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி கடலினிலே தெப்பத்திருவிழாவும்,மகோற்பவகாலங்களில் நடைபெறும் சிறப்பான விழாக்களாகும்.இங்கு அது மட்டுமல்லாது நவராத்திரி, கேதாரகௌரி விரதம், வரலட்சுமி விரதம் ஆடிப்பூரம்,கந்தசஷ்டி,பிள்ளையார் பெருங்கதை,திருவெம்பாவை போன்றன மிகச்சிறப்பாக செய்யப்படுகிறது.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குரிகாடுவன்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஜவ்வினா (யாழ்பானம்)
அருகிலுள்ள விமான நிலையம்
ஜவ்வினா (யாழ்பானம்)