Sunday Nov 24, 2024

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு

முகவரி

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி மாநிலம் – 609607 தொலைபேசி எண் 4368 236530

இறைவன்

இறைவன்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் இறைவி: பிராணேஸ்வரி, பிராணாம்பிகை

அறிமுகம்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோ‌ழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் சனீஸ்வரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீஸ்வரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீஸ்வரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர். தல விருட்சம்: தர்ப்பை தீர்த்தம்: நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள்

புராண முக்கியத்துவம்

சுமார் 3000 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோவிலான இந்த ஆலயத்தின் இறைவனான சிவ பெருமான் தர்பாரண்யேஸ்வரர் என்றும் இறைவி பிராணேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவிலின் சிவபெருமான் தர்பை புல்லிலிருந்து தோன்றியதால் இவருக்கு “தர்பாரண்யேஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. நெடுங்காலத்திற்கு முன்பு வாழ்ந்த நளன் எனும் அரசன் தமயந்தி என்னும் பேரழகு வாய்ந்த இளவரசியை மனைவியாக அடைந்ததை பொறுக்க முடியாத தேவர்கள், சனீஸ்வர பகவானிடம் சென்று நளனை பிடித்து தகுந்த படம் கற்று கொடுக்குமாறு கூறினார். சனீஸ்வர பகவானும் நளனை ஏழரை நாட்டு சனியாக பிடித்து கொண்டார். இதனால் அரசனாக இருந்த நளன் தனது மனைவி தமயந்தி மற்றும் குழந்தைகளை பிரிந்ததுடன் தனது நாடு, ராஜ்ஜியம் என அனைத்தையும் இழந்து ஏழரை ஆண்டு காலம் மிகுந்த துன்பங்களை அனுபவித்தான். ஏழரை ஆண்டுகள் கழித்து இந்த திருநள்ளாறு கோவிலுக்கு வந்த நளன், இக்கோவில் குளத்தில் நீராடி இங்கு வீற்றிருக்கும் சனி பகவானை வழிபட்ட பின் தான் முன்பு இழந்த தனது குடும்பம், நாடு , ராஜ்ஜியம் என அனைத்தையும் திரும்ப பெற்று இன்பமாக வாழ்ந்தான். நளன் நீராடிய தீர்த்தம் இன்றும் “நள தீர்த்தம்” என அழைக்கப்படுகிறது.ஏழாம் நூற்றாண்டில் சமண மதத்தினரின் ஆதிக்கம் அதிகமிருந்த போது “திருஞானசம்பந்தர்” சைவ மதமே உண்மையானது என்று நிரூபிக்க இந்த கோவிலின் இறைவனான தர்பாரண்யேஸ்வரரை போற்றி இயற்றிய பதிகம் கொண்ட ஓலை சுவடிகளை தீயிலிட்ட போது அந்த ஓலைச்சுவடிகள் எரியாமல் அப்படியே இருந்ததால், அதை “பச்சை பதிகம்” என அழைத்தனர். இதன் மூலம் சைவ மதம் உண்மையானது என நிரூபித்தார் திருஞானசம்பந்தர். தமிழகத்தில் மீண்டும் சைவம் தழைக்க ஆரம்பித்தது. தல வரலாறு தமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடத நாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார்.அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.

நம்பிக்கைகள்

சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சோமாஸ்கந்தமூர்த்தி வடிவத்தின் பிறப்பிடம்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமாலுக்கு குழந்தையில்லாமல் இருந்த வேளையில் அவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவை உருவாக்கினார். இந்த வடிவத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான். ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது, முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் அவனை வென்றான் இந்திரன். இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியைப் பெற்று வந்தான். அதை திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான். அதே போல மேலும் ஆறு மூர்த்திகளைப் படைத்தான். அதில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான். அதுவே தற்போது “தியாகவிடங்கர்’ என வழங்கப்படுகிறது. தியாகவிடங்கருக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது. தியாகவிடங்கரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. வாசல்படிக்கு மரியாதை கொடுங்கள்: திருநள்ளாறு செல்பவர்கள் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்ததும், முதல் படியை தொட்டு வணங்க வேண்டும். ஏனெனில், இந்த வாசல்படி மாடத்தில் சனீஸ்னீ வரன் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை. நளன் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்ததுமே, நியாயத்துக்கு புறம்பாக செயல்பட்டதற்காக இறைவனிடம் தண்டனை அடைய வேண்டி வருமோ என்று பயந்த சனீஸ்னீ வரன் வாசல்படியோடு நின்று, அவனை விட்டு நீங்கி விட்டதாக சொல்வர். ஆனால், இறைவன் சனீஸ் வரனின் நிலையைப் பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி, தன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார். தீர்தீத்தங்கள் : திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்பதே நிஜம். தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை. இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன. ஒரு காலத்தில் உலகிற்கு ஏதேனும் கேடு நேர இருக்குமானால் கங்கா, பிரம்ம மற்றும் நள தீர்த்தங்களின் நீர் சிவப்பாக மாறிவிடுமாம். இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தகுந்த பரிகார பூஜைகள் செய்து மக்கள் தப்பித்திருக்கிறார்கள் என்கின்றனர். சனீஸ்னீ வரனை வணங்கும் முறை: காலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். கோயிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும். இந்த சுவரில் வரையப்பட்டுள்ள நள சரிதத்தை பக்திப்பூர்வமாக பார்த்த பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும். பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். இங்குள்ள மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கிய பின் வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும். அங்குள்ள தெய்வங்களை தரிசித்து கட்டைக் கோபுர வாசல் சென்று அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும். பிறகு தான் சனீஸ்னீ வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்னீ வரனை தரிசிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறையல்ல. இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்னீ வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும். தங்கக்கவசம்: சனிப்பெயர்ச்சி மற்றும் முக்கிய காலங்களில் சனீஸ்வரன் தங்க காக வாகனத்தில் தங்கக்கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். சனீஸ்னீ வரனைக் கண்டால் எல்லாருமே ஓட்டம் பிடிக்கும் நிலைமையில், இங்கே தங்கக்கவச சனீஸ்வரனைத் தரிசிக்க கூட்டம் அலை மோதும். சனீஸ்னீ வரன் வரலாறு: சூரியனுக்குரிய மனைவியரில் ஒருத்தி உஷா. இவள் சூரியனின் வெப்பம் தாளாததால் தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சாயாதேவி என்ற பெயரில் தங்கியிருந்தாள். சாயாதேவிக்கு சனீஸ்னீ வரன் பிறந்தார். பின்னர் உண்மை தெரிந்தது. சூரியன் தன்னை ஏமாற்றிய மனைவியைக் கடிந்து கொண்டார். அவளுக்கு பிறந்த சனீஸ்னீ வரனை வெறுத்து ஒதுக்கி விட்டார். சனி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கி நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார். சனி-அறிவியல் தகவல்: இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது. சனீஸ்னீ வரனுக்கு உரியவை : ராசி-மகரம், கும்பம் திசை-மேற்கு அதிதேவதை-எமன் நிறம்-கருப்பு வாகனம்-காகம் தானியம்-எள் மலர்-கருங்குவளை வஸ்திரம்-கருப்பு ஆடை ரத்தினம்-நீலமணி நிவேதனம்-எள்ளுப்பொடி சாதம் சமித்து-வன்னி உலோகம்-இரும்பு.

திருவிழாக்கள்

இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்கள், மகாசிவராத்திரி, மார்கழி திருவிழா, ஐப்பசி அன்னாபிஷேகம், பிரதோஷம், தமிழ்-ஆங்கில வருடப்பிறப்பு, சனிப்பெயர்ச்சி ஆகியவை ஆகும்.

காலம்

1000 – 2000 வருடம் பழமை வாய்ந்தது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை(புதுச்சேரி)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநள்ளாறு

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுச்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top