அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில், காரைக்குடி
முகவரி
அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில் நேமம், காரைக்குடி, புதுக்கோட்டை,போன்: +91 4577- 264 190, 94428- 14475
இறைவன்
இறைவன்: ஜெயங்கொண்ட சோளீஸ்வரர்
அறிமுகம்
இத்தல விநாயகர் ஆவுடையில் வீற்றிருப்பது எங்கும் காணாத தனி சிறப்பு. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.
புராண முக்கியத்துவம்
அசுரர்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள, தேவர்கள் சிவபெருமானை தரிசிக்கவந்தனர். யோக நிலையில் இருந்த அவரை எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் மீது மலர்க்கணைகளை தொடுக்கும் படி மன்மதனை வேண்டினர். இட்ட பணியை செய்யாவிட்டால் தன்னை சபித்துவிடுவர் என்று அஞ்சிய மன்மதனும் சிவபெருமான் மீது மலர் அம்பை தொடுத்தான். கோபத்துடன் நெற்றிக்கண்ணை திறந்த சிவன், மன்மதனை சாம்பலாக்கினார். காமத்திற்கு அதிபதியான மன்மதனை வெற்றி கொண்டதால், இங்குள்ள சுவாமிக்கு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இவர் அம்பாள் சவுந்தரநாயகியம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்பகுதியை ஜெயங்கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டபுரம், குலசேகரபுரம், மதுநதிபுரம் என்பர்.
திருவிழாக்கள்
பிரதோஷம், சிவராத்திரி
காலம்
1000-2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
நகரத்தார்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரைக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி